ஹாலிவுட்டில் நிறவெறி!

ஹாலிவுட் பட உலகை அடக்கி ஆழும் மனிதத்தன்மைக்கு எதிரான நிறவெறி முதன் முதலாக நீதிமன்றத்தில் கேள்விக்குட்ப்படுத்தப்படுகிறது.

2003 ல் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டான ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் என்ற சினிமாவில் இணை டைரக்டராக பணியாற்றிய ப்ராங்க் டாவிஸ், தன்னை வேலையிலிருந்து வெளியேற்றிய யூனிவர்ஸல் பிக்ஸர்ஸ் ஸ்டுடியோவின் அராஜக செயலுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஸ்டுடியொவின் இச்செயல்பாடு 1964 – ல் இயற்றப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிரானது என்று அனைத்து சமதொழில் உரிமை கமிஷன் அறிவித்திருக்கின்றது.

இந்த படத்தின் கதாநாயகனாக ஜான் ஸிங்கிள்டன் என்ற மற்றொரு கறுப்பினத்தை சேர்ந்தவர் நடித்திருந்தார். இவர் தான் தனக்கு முந்தைய பல படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு தேடி தந்த டாவிஸை சக துணைடைரக்டராக நியமிக்க வைத்தவர். ஆனால் இவருக்கு அதற்கான எவ்வித தகுதியும் இல்லை எனக்கூறி ஸ்டுடியோ டாவிஸை வேலையை விட்டு நீக்கியது.

தன் தோலின் நிறம் தான், தன்னை வேலையை விட்டு நீக்க முக்கிய காரணம் என டாவிஸ் கூறுகின்றார். தனக்கு நிச்சயிக்கப்பட்ட சம்பளமே மற்றவர்களை விட மிகக் குறைவாக இருந்தது என்றும் அவர் கூறினார்.

ஹாலிவுட்டில் நிறவெறி என்பது சர்வசாதாரணமான விஷயம் என்ற போதிலும், பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இதற்கு எதிராக இதுவரை வெளிப்படையாக வந்ததில்லை என்றும் உரிமை போராட்டத்தின் வரலாற்றில் இவ்வழக்கு ஒரு மைல்கல் எனவும் சம உரிமை போராட்ட கழகத்தினர் தெரிவித்தனர்.

வழக்கில் அனைத்து ஆதாரங்களும் டாவிஸிற்கு சாதகமாக இருக்கும் நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பு டாவிஸிற்கு சாதகமாக அமையவே வாய்ப்புள்ளது என சம உரிமை போராட்ட கமிஷனின் வழக்கறிஞர் அன்னா பார்க் கூறினார். சமீப காலங்களில் டென்செல் வாஷிங்டன், ஹாலெ பெரி போன்றவர்கள் ஆஸ்கார் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் ஹாலிவுட்டில் நிறவெறி குறைந்து வருவது போன்ற எண்ணத்தை அவை ஏற்படுத்தியிருந்தன. ஆனால், இவையெல்லாம் வெறும் வெளிக்காட்சிகள் மட்டுமே என்பது தற்போது உறுதியானதாக அன்னா பார்க் கூறினார்.

உலகம், செய்திகள் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

ஆப்கன் காவல்துறையினருக்கு யு.எஸ்ஸின் அன்பு பரிசு!

கிழக்கு ஆப்கானிஸ்தான் பிரதேசமான நன்கார்ஹரில் ஏழு ஆப்கானிஸ்தான் காவலர்களை கடந்த திங்கள் கிழமை இரவு அமெரிக்க படையினர் சுட்டுக் கொன்றனர்.  அமெரிக்க-ஆப்கன் கூட்டு படையினர் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததை தொடர்ந்து எதிர்த்து சுட்டதில் இவர்கள் இறந்ததாக அமெரிக்க படையினர் தெரிவித்தனர்.

ஆனால் இறந்தவர்கள் ஆப்கானிஸ்தான் காவலர்கள் என்பதை இதுவரை அமெரிக்க படை உறுதிபடுத்தவில்லை. ஆனால் அதே சமயம் நான்கஹார் பகுதியில் உள்ள ஒரு செக்போஸ்டின் மீது எவ்வித காரணமும் இன்றி அமெரிக்க இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆப்கான் காவல்துறை அமெரிக்க இராணுவத்தின் மீது குற்றம் சுமத்தியது.
அமெரிக்க தரைப்படையினரின் தாக்குதலுடன் ஆப்கான் காவல்துறையினர் மீது அமெரிக்க விமானப்படையும் குண்டுகளை பொழிந்ததாக முதிர்ந்த காவல்துறை அதிகாரி நஸிர் அஹமது கூறினார். அமெரிக்கப்படையினரின் இச்செயல் கொடூரமானது என்றும் அவர் கூறினார். துக்ககரமான விபத்து என இச்சம்பவத்தை ஆப்கான் அதிபர் கர்ஸாயின் செய்தி தொடர்பாளர் கரீம் ரஹீமி தெரிவித்தார்.

மற்றொரு சம்பவத்தில் குனார் பிரதேசத்திலும் மேற்கு ஆப்கானிஸ்தானிலும் பொது மக்களில் மூன்று பேரை நேட்டோ படை சுட்டுக் கொன்றது. செக்போஸ்டில் வாகனத்தை நிறுத்தாதை தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தியதாக நேட்டோ படை இதற்கு காரணம் கூறியது. கடந்த ஏப்ரல் மாதம் பொதுமக்களில் 50 பேரை நேட்டோ படை சுட்டுக் கொன்றதை தொடர்ந்து, இது போன்ற நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என நேட்டோ மற்றும் அமெரிக்க படையினரிடம் அதிபர் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம், செய்திகள் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

குவாண்டனமோ மூடப்பட வேண்டும் – பவல்!

குவாண்டனமோ வன்கொடுமைசாலையை எவ்வளவு வேகமாக இழுத்து மூட முடியுமோ அவ்வளவு வேகத்தில் இழுத்து மூட தயாராக வேண்டும் என அமெரிக்க முன்னாள் செயலாளர் காலின் பவல் கோரிக்கை விடுத்தார்.

குவாண்டனமோ சிறைச்சாலை அமெரிக்காவிற்கு மிகப்பெரிய பாதகம் என்றும், சர்வதேச அளவில் அது தேசத்தின் பெருமைக்கு களங்கம் விளைவிக்கின்றது என்றும் பவல் கூறினார். குவாண்டனமோ சிறைச்சாலையை உடனடியாக மூடி விட்டு அங்கு கொடுமைப்படுத்தப்படும் 380 க்கும் மேற்பட்ட சிறைவாசிகளை அமெரிக்க ஃபெடரல் சட்டத்தின்படி விசாரணை செய்ய வேண்டும் எனவும் குவாண்டனமோ எதிர்பார்த்ததைப் போன்றல்லாமல் அமெரிக்காவிற்கு நன்மையை விட தீமைகளையே அதிகம் விளைவிக்கின்றது என்று அவர் கூறினார்.

உலகம், செய்திகள் இல் பதிவிடப்பட்டது . 2 Comments »

சீனா – அமெரிக்காவின் அடுத்த இலக்கு?

சீனாவின் அதிகரித்து வரும் இராணுவ வல்லமை குறித்து அமெரிக்கா ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்க காங்கிரஸிற்கு சமர்ப்பிக்கப்பட்ட பென்டகனின் அறிக்கையில் சீனா இராணுவ தேவைகளுக்காக அதிகளவு செலவிடுவதாக குறிப்பிட்டுள்ளதுடன், அதிகளவு வெளிப்படை தன்மைகளை வேண்டுகோளையும் விடுத்துள்ளது.

சீனாவினால் முன்கூட்டிய தாக்குதலை மேற்கொள்ள முடியும் எனவும் அதனிடம் நீர் மூழ்கிகளும் ஆளில்லாமல் செயற்படும் விமானங்களும் நவீன ஏவுகணைகளும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா தனது எல்லைப் பகுதியை மையமாகக் கொண்ட முன் கூட்டிய தற்பாதுகாப்பு தாக்குதல் தந்திரோபாயத்தை முன்னெடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்வான் நீரிணையில் ஏற்படும் நெருக்கடியில் அமெரிக்கா தலையிடலாம் என்பதை அடிப்படையாக வைத்தே சீனா தனது இராணுவ திட்டமிடல்களை மேற்கொண்டுள்ளது.

சீனா ஜனவரியில் மேற்கொண்ட செய்மதி எதிர்ப்பு ஆயுத சோதனையினால் செய்மதிகளை கொண்டுள்ள சகல நாடுகளுக்கும் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களை போல் சீனாவின் இராணுவ செலவீனங்களும் இராணுவ நோக்கங்களிலும் இரகசியத்தன்மை காணப்படுவதாய் குறிப்பிட்டுள்ளது.

பென்டகனின் அறிக்கையில் அமெரிக்கா வரை செல்லக் கூடிய கண்டங்களுக்கு இடையிலான ஏவுகணையை சீனா கொண்டிருப்பது குறித்து கவலை வெளியிடப்பட்டுள்ளது.

சீனாவிடம் 8,000 கிலோ மீற்றர் செல்லக் கூடிய கண்டங்களுக்கு இடையிலான ஏவுகணைகளை கொண்ட நீர் மூழ்கிகள் உள்ளன. ஒவ்வொன்றும் 12 ஏவுகணைகளை கொண்டு செல்லக் கூடியன.

படித்தது

உலகம், செய்திகள் இல் பதிவிடப்பட்டது . 1 Comment »

டேட்டிங் பெயரில் செக்ஸ் வியாபாரம்-சீனா அதிரடி!

“டேட்டிங் வெப்சைட் என்ற பெயரில், செக்ஸ் வியாபாரம் நடந்து வருகிறது” என்று, 12 “டேட்டிங் வெப்சைட்’கள் மீது, சீனா நடவடிக்கை எடுத்துள்ளது. வெப்சைட்களை கண்காணிக்க, சீனாவில் ஒரு அமைப்பு உள்ளது. தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்த அமைப்பு, எல்லா வெப்சைட்களையும் அலசி, சிலவற்றை தடை செய்ய பரிந்துரை செய்கிறது. “டேட்டிங் வெப்சைட்’கள் எல்லாவற்றையும் அலசிய இந்த அமைப்பு, “12 வெப்சைட்களை தடை செய்ய வேண்டும்’ என்று பரிந்துரை செய்துள்ளது. “இந்த வெப்சைட்களில், டேட்டிங் தொடர்பான தகவல்களை விட, விபசாரத்துக்கு வழி வகுக்கும் தகவல்கள் தான் அதிகம் உள்ளன. உண்மையில், இவை விபசாரத்துக்கு துணை போகின்றன’ என்று கண்டித்துள்ளது. வெப்சைட்களில், பெண்களின் படங்களையும் போட்டு, “டேட்டிங்’ விவரங்களை கொடுத்துள்ளன. “நாங்கள் டேட்டிங் தொடர்பான விவரங்களை தான் தந்துள்ளோம். ஆனால், சீன அதிகாரிகள், அவற்றை, விபசாரம் தொடர்பான தகவல்கள் என்று தவறாக நினைக்கின்றனர்’ என்று, வெப்சைட்கள் தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டது. “ஆட்சேபனை தெரிவிக்கப்பட்ட தகவல்கள், படங்கள் எல்லாவற்றையும் அப்புறப்படுத்தி விட வேண்டும். அப்படி செய்தால் வெப்சைட்கள், சீனாவில் பார்க்க அனுமதிக்கப்படும்’ என்று குழு இறுதியாக எச்சரித்து, கெடு விதித்துள்ளது. இன்னும் ஒரு மாதத்துக்குள், திருத்தம் செய்யாவிட்டால், இந்த வெப்சைட்களை தடை செய்ய, சீன அரசு திட்டமிட்டுள்ளது.

சீனாவில், ஏற்கனவே, பல வெப்சைட்களை பார்க்க முடியாமல் செய்துள்ளது இந்த கண்காணிப்பு குழு. அதிலும், கிளுகிளு வெப்சைட்கள் பலவற்றுக்கு தடை விதித்துள்ளது. – செய்தி.

“கிளுகிளு வெப்சைட்கள்” என்பதற்கு என்ன இலக்கணம்?

அரைகுறை ஆடையில் அங்கங்களை வெளிக்காட்டி கொண்டிருக்கும் பெண்களின் புகைப்படங்களை வெளியிடும் வெப்சைட்டுகளும் இந்த “கிளுகிளு வெப்சைட்கள்” பட்டியலில் அடங்குமா? எனில்,

தமிழ் வலையுலகிலும், பத்திரிக்கையுலகிலும் எத்தனை வெப்சைட்கள் மற்றும் பத்திரிக்கைகள் தடைசெய்யப்பட வேண்டும்.

ஏன் அந்தவகையில் பார்த்தால் இந்த செய்தியை வெளியிட்டுள்ள தினமலரே ஒரு “கிளுகிளு வெப்சைட் கம் பத்திரிக்கை” தானே?

என்னமோப்பா ஒண்ணுமே புரியல!

உலகம், சிந்தனைகள், செய்திகள் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

யுஎஸ் தாக்குதலில் மூன்று குழந்தைகள் பலி!

ஈராக்கிலுள்ள அன்பார் மாகாணத்தில் அமெரிக்க படையினரை கொலை செய்வதற்காக சாலையோரம் குண்டுவைக்க முயன்ற மூன்று பேர் மீது அமெரிக்கப் படையினர் நடத்திய தாக்குதலில் 3 குழந்தைகள் இறந்தனர்.

ஈராக்கின் தலைநகரான பாக்தாதில் இருந்து மேற்கே 65 கி.மீ. தொலைவில் உள்ள அன்பார் மாகாணத்திலுள்ள ஃபலூஜா என்ற இடத்தில் முக்கிய நெடுஞ்சாலையில் வெடிமருந்தை வைக்க முயன்ற 3 பேரை குறிவைத்து அமெரிக்க ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 வயது முதல் 11 வயது வரையிலான 3 குழந்தைகள் உயிரிழந்ததாக அமெரிக்க ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் அமெரிக்கப்படையினரின் தாக்குதலில் அவர்கள் துப்பாக்கி குண்டினால் கொல்லப்பட்டார்களா அல்லது அதையடுத்து நடந்த வெடிமருந்து வெடித்ததில் உயிரிழந்தார்களா என்பது உறுதியாக தெரியவரவில்லை என்றும் ராணுவ அலுவலகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் பற்றி உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

உலகம், செய்திகள் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

ஈரான் மீது யுஎஸ் போர் தொடுக்காது – ரைஸ்.

ஈரான் மீது போர் தொடுப்பதற்கு அமெரிக்கா தயாராக இல்லை என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் கண்டலினா ரைஸ் கூறியுள்ளார்.

மேட்ரிட் நகரில் ஸ்பெயின் வெளியுறவு அமைச்சர் மிகில் மாரடினோஸ்சை சந்தித்து பேசிய பின்னர் பத்திரிக்கையாளர்களுடன் பேசும் பொழுது ரைஸ் இவ்வாறு தெரிவித்தார்.

ஈரானின் அணு தொடர்பான செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் பொழுது, “ஈரான் பிரச்சனையில் தங்களது கொள்கை என்ன என்பதை அதிபர் புஷ் தெ ளிவுபடுத்தியுள்ளதாகவும், அந்தக் கொள்கைக்கு அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் துணை அதிபர் ஆகியோர் ஆதரவு தெரிவித்து இருப்பதாகவும்” கூறினார்.

இதற்கு முன்னர் ஐநாவின் அணு கண்காணிப்பு அமைப்பின் தலைவர் முகம்மது எல்பராடி, ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தார்.

இந்தப் பிரச்சனைக்கு தூதரக ரீதியில் தீர்வு காணும் வாய்ப்பு இருப்பதாகவும் ரைஸ் கூறினார்.

ஈரான் மீது ஏற்கெனவே ஐநா பாதுகாப்பு கவுன்சில் இரண்டு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. 3வது தடை விதிக்க அமெரிக்கா வலியுறுத்தி வருவது கவனிக்கத்தக்கதாகும்.

உலகம், செய்திகள் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »