சீனாவின் அதிகரித்து வரும் இராணுவ வல்லமை குறித்து அமெரிக்கா ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்க காங்கிரஸிற்கு சமர்ப்பிக்கப்பட்ட பென்டகனின் அறிக்கையில் சீனா இராணுவ தேவைகளுக்காக அதிகளவு செலவிடுவதாக குறிப்பிட்டுள்ளதுடன், அதிகளவு வெளிப்படை தன்மைகளை வேண்டுகோளையும் விடுத்துள்ளது.
சீனாவினால் முன்கூட்டிய தாக்குதலை மேற்கொள்ள முடியும் எனவும் அதனிடம் நீர் மூழ்கிகளும் ஆளில்லாமல் செயற்படும் விமானங்களும் நவீன ஏவுகணைகளும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா தனது எல்லைப் பகுதியை மையமாகக் கொண்ட முன் கூட்டிய தற்பாதுகாப்பு தாக்குதல் தந்திரோபாயத்தை முன்னெடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்வான் நீரிணையில் ஏற்படும் நெருக்கடியில் அமெரிக்கா தலையிடலாம் என்பதை அடிப்படையாக வைத்தே சீனா தனது இராணுவ திட்டமிடல்களை மேற்கொண்டுள்ளது.
சீனா ஜனவரியில் மேற்கொண்ட செய்மதி எதிர்ப்பு ஆயுத சோதனையினால் செய்மதிகளை கொண்டுள்ள சகல நாடுகளுக்கும் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களை போல் சீனாவின் இராணுவ செலவீனங்களும் இராணுவ நோக்கங்களிலும் இரகசியத்தன்மை காணப்படுவதாய் குறிப்பிட்டுள்ளது.
பென்டகனின் அறிக்கையில் அமெரிக்கா வரை செல்லக் கூடிய கண்டங்களுக்கு இடையிலான ஏவுகணையை சீனா கொண்டிருப்பது குறித்து கவலை வெளியிடப்பட்டுள்ளது.
சீனாவிடம் 8,000 கிலோ மீற்றர் செல்லக் கூடிய கண்டங்களுக்கு இடையிலான ஏவுகணைகளை கொண்ட நீர் மூழ்கிகள் உள்ளன. ஒவ்வொன்றும் 12 ஏவுகணைகளை கொண்டு செல்லக் கூடியன.
3:29 பிப இல் ஜூன் 7, 2007
சீனாவை அமெரிக்கா நெருங்க முடியாது இது தான் உண்மை. அது பலவகையிலும் சீனாவின் மீது dependent ஆக உள்ளது. சீனா நினைத்தால் அமெரிக்காவின் மொத்த பொருளாதாரத்தையும் நெறுங்க வைக்க முடியும்.