ஹாலிவுட் பட உலகை அடக்கி ஆழும் மனிதத்தன்மைக்கு எதிரான நிறவெறி முதன் முதலாக நீதிமன்றத்தில் கேள்விக்குட்ப்படுத்தப்படுகிறது.
2003 ல் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டான ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் என்ற சினிமாவில் இணை டைரக்டராக பணியாற்றிய ப்ராங்க் டாவிஸ், தன்னை வேலையிலிருந்து வெளியேற்றிய யூனிவர்ஸல் பிக்ஸர்ஸ் ஸ்டுடியோவின் அராஜக செயலுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஸ்டுடியொவின் இச்செயல்பாடு 1964 – ல் இயற்றப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிரானது என்று அனைத்து சமதொழில் உரிமை கமிஷன் அறிவித்திருக்கின்றது.
இந்த படத்தின் கதாநாயகனாக ஜான் ஸிங்கிள்டன் என்ற மற்றொரு கறுப்பினத்தை சேர்ந்தவர் நடித்திருந்தார். இவர் தான் தனக்கு முந்தைய பல படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு தேடி தந்த டாவிஸை சக துணைடைரக்டராக நியமிக்க வைத்தவர். ஆனால் இவருக்கு அதற்கான எவ்வித தகுதியும் இல்லை எனக்கூறி ஸ்டுடியோ டாவிஸை வேலையை விட்டு நீக்கியது.
தன் தோலின் நிறம் தான், தன்னை வேலையை விட்டு நீக்க முக்கிய காரணம் என டாவிஸ் கூறுகின்றார். தனக்கு நிச்சயிக்கப்பட்ட சம்பளமே மற்றவர்களை விட மிகக் குறைவாக இருந்தது என்றும் அவர் கூறினார்.
ஹாலிவுட்டில் நிறவெறி என்பது சர்வசாதாரணமான விஷயம் என்ற போதிலும், பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இதற்கு எதிராக இதுவரை வெளிப்படையாக வந்ததில்லை என்றும் உரிமை போராட்டத்தின் வரலாற்றில் இவ்வழக்கு ஒரு மைல்கல் எனவும் சம உரிமை போராட்ட கழகத்தினர் தெரிவித்தனர்.
வழக்கில் அனைத்து ஆதாரங்களும் டாவிஸிற்கு சாதகமாக இருக்கும் நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பு டாவிஸிற்கு சாதகமாக அமையவே வாய்ப்புள்ளது என சம உரிமை போராட்ட கமிஷனின் வழக்கறிஞர் அன்னா பார்க் கூறினார். சமீப காலங்களில் டென்செல் வாஷிங்டன், ஹாலெ பெரி போன்றவர்கள் ஆஸ்கார் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் ஹாலிவுட்டில் நிறவெறி குறைந்து வருவது போன்ற எண்ணத்தை அவை ஏற்படுத்தியிருந்தன. ஆனால், இவையெல்லாம் வெறும் வெளிக்காட்சிகள் மட்டுமே என்பது தற்போது உறுதியானதாக அன்னா பார்க் கூறினார்.
மறுமொழியொன்றை இடுங்கள்