குவாண்டனமோ வன்கொடுமைசாலையை எவ்வளவு வேகமாக இழுத்து மூட முடியுமோ அவ்வளவு வேகத்தில் இழுத்து மூட தயாராக வேண்டும் என அமெரிக்க முன்னாள் செயலாளர் காலின் பவல் கோரிக்கை விடுத்தார்.
குவாண்டனமோ சிறைச்சாலை அமெரிக்காவிற்கு மிகப்பெரிய பாதகம் என்றும், சர்வதேச அளவில் அது தேசத்தின் பெருமைக்கு களங்கம் விளைவிக்கின்றது என்றும் பவல் கூறினார். குவாண்டனமோ சிறைச்சாலையை உடனடியாக மூடி விட்டு அங்கு கொடுமைப்படுத்தப்படும் 380 க்கும் மேற்பட்ட சிறைவாசிகளை அமெரிக்க ஃபெடரல் சட்டத்தின்படி விசாரணை செய்ய வேண்டும் எனவும் குவாண்டனமோ எதிர்பார்த்ததைப் போன்றல்லாமல் அமெரிக்காவிற்கு நன்மையை விட தீமைகளையே அதிகம் விளைவிக்கின்றது என்று அவர் கூறினார்.
8:44 முப இல் ஜூன் 13, 2007
இப்பொழுதாவது அறிவு வந்ததே இவருக்கு..? ஆச்சரியம்தான்..
ஆமாம்.. இவர் பதவியில் இருந்தபோது என்ன செய்து கொண்டிருந்தாராம்..? அப்போதும் அது சிறைச்சாலையாகத்தானே இருந்தது.. அங்கிருந்த மோசமான குற்றவாளிகள் என்று அறியப்பட்டவர்களை அமெரிக்க சிறைச்சாலைகளுக்கு டிரான்ஸ்பர் செய்துவிட்டுத்தானே அல்-கொய்தா தீவிரவாதிகளை அங்கு கொண்டு சென்று அடைத்தார்கள்..
அந்த சிறைச்சாலையை அவர் பதவியில் இருந்த காலத்திலும்கூட ஐ.நா.வின் மனித உரிமைகள் கமிஷன் பார்வையிட அனுமதி மறுத்ததே அமெரிக்கா. அதற்கு என்ன சொல்கிறாராம் இவர்..?
9:00 முப இல் ஜூன் 13, 2007
நல்ல கேள்வி உண்மை தமிழன். நீங்கள் உண்மையான தமிழனாக இருந்ததால் நியாயம் உங்கள் கண்களுக்கு சரியாக தெரிந்தது போலும்.
அது வேறு ஒன்றும் இல்லை. எல்லாம் ஊடகமேனியா தான் இதற்கு காரணம் என நினைக்கின்றேன்.
அன்று அவர் அதிகாரத்தில் இருந்தார். அமெரிக்க அரசு அதிகாரத்தில் இருப்பவர்கள் என்ன செய்வார்களோ அதனைத் தான் அவர் அன்று செய்தார். ஊடகத்தில் பெயர் நன்றாக அடிப்பட்டது.
இன்று அதிகாரத்தில் இல்லை. அதிகாரத்தில் இல்லாதவர்களில் யாரின் பெயர் ஊடகங்களில் அதிகமாக அடிபடும்? அதே! யார் அரசை விமர்சிக்கின்றார்களோ அவரின் பெயர். அதனை தான் இன்று அவர் செய்கின்றார். எல்லாம் ஊடகமாயம். ஹா ஹா!