பர்தாவுக்கு எதிராக புதிய ஜனாதிபதி.

ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராஜஸ்தான் கவர்னர் பிரதீபாபட்டீல், ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இந்தியாவில் பெண்கள் பர்தா அணிவது எதிராக கருத்துக்களை தெரிவித்தார்.

“பெண்கள் முகத்தை மூடும் பர்தா அணிய தேவை இல்லை. எத்தனையோ ஆண்டுகளாக இருந்து வந்த இந்த பழக்கத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்தியாவில் பெண்கள் பர்தா அணியும் பழக்கம் முகலாயர் ஆட்சி காலத்தில் தான் ஏற்பட்டது. படையெடுத்து வந்த முகலாயர்களிடமிருந்து தங்களை பாதுகாக்கவே பெண்கள் பர்தா அணிந்தனர். தற்போது சுதந்திர இந்தியாவில் அதற்கான அவசியம் ஏதும் இல்லை. எனவே பெண்கள் அவற்றை விட்டு வெளிவர வேண்டும்” என்று கூறினார்.

புதிய ஜனாதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள ப்ரதிபா பெண்களின் முன்னேற்றத்திற்காக குரல் கொடுக்கக் கூடியவர் என்பதும், அவர்களின் விடுதலைக்காக பாடுபடக் கூடியவர் என்பதும் அவரின் பர்தாவை குறித்த இக்கருத்துக்களில் இருந்து தெளிவாகிறது.

நாட்டில் பெண்களின் விடுதலைக்கும், முன்னேற்றத்திற்கும் இத்தகைய தலைவர்கள் நாட்டிற்கு தற்போது மிக அவசியம் ஆகும். அவர் ஜனாதிபதியாக தேர்வாக வாழ்த்துவோம்.

இந்தியா, செய்திகள் இல் பதிவிடப்பட்டது . 6 Comments »

6 பதில்கள் to “பர்தாவுக்கு எதிராக புதிய ஜனாதிபதி.”

  1. தமிழ் குடிமகன் Says:

    நண்பரே! நாம் ஒன்றை நன்றாக சிந்திக்க வேண்டும்.
    நம்முடைய குடியரசுத் தலைவர் வேட்பாளர், விமர்சிக்கும் அளவுக்கு பர்தா அணிவதில் என்ன தவறை நாம் காண்கிறோம்.ஒன்றுமில்லை மாறாக அதில் நன்மையத்தான் காண முடிகிறது.

    ஈவ் டீஸிங்கும், பாலியல் கொடுமைகளும் பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் இந்நாட்களில், பெண்களுக்கு சுய பாதுகாப்பு அவர்களின் சுய நடத்தையில் தான் இருக்கிறது என்பதில் துளி கூட சந்தேகம் இல்லை.ஆண்கள் தான் ஈவ் டீஸிங்கிற்கு காரணம் என்று கூறுவது தவறு. காரணம் பிரா தெரியும் விதமாக ஜாக்கட் அணிவதும், துடை தெரியும் விதமாக ஸ்கட் அணிவதும்,ஜன்னல் வைத்து ஜாக்கட் போடுவதும் தான் ஈவ் டீஸிங்கிற்கு தலையாய காரணங்கள்.

    இத்தகைய குற்றங்களை வெறும் மகளிற் காவல் நிலையங்கள் மட்டும் வைத்து தடுத்து விட முடியாது. ஏன்?. மகளிற் காவலர்கள் கூட இத் துன்பங்களுக்கு ஆட் கொள்ளப்படுகிறார்கள்.

    பெண்களுக்காக போராடும் பிரதீபாபட்டீல் போன்றோர் சற்று சிந்திப்பது நன்று. எந்த உடை பெண்களுக்கு பண்பையும், பாதுகாப்பையும் தருகிறதோ அதை வலியுறுத்தி பேசுவது நல்லது. அந்த வ்கையில் பெண்களின் பாதுகாப்பிற்கு பர்தா போன்ற கண்ணியமான ஆடைகள் எந்த வகையில் குறைந்தது?. பிரதீபாபட்டீல் போன்ற உயர் தட்டு மக்களுக்கு வேண்டுமானால்,
    நீச்சல் உடைகள் பாதுகாப்பனதாக இருக்கலாம்.ஆனால் நடுத்தற உழைக்கும் மக்களுக்கும், ஏழைகழுக்கும் பர்தா போன்ற ஆடைகள் தான் பாதுகாப்பு என்பதை
    மறந்து விடக் கூடாது.
    முகலாயர்களிடமிருந்து தங்களை பாதுகாக்கவே பெண்கள் பர்தா அணிந்தனர் என்று கூறும் இவர்கள், அப்போது இல்லாத சர்வ ரவுடிஸம் இன்று மலிந்து கிடக்கும் இந்நாளிழ்தான் பர்தாவின் அவசியத்தை உணர வேண்டும்.
    சாதாரணமாக இரண்டு பெண்கள் சென்று கொண்டு இருக்கிறார்கள். அதில் ஒரு பெண் கவற்ச்சி ஆடையும் மற்றோரு பெண் பர்தாவும் அணிந்து இருக்கின்றனர்.
    இந்த இரண்டு பேரில் யார் மீது அடுத்தவர்களுடைய கவனம் அதிகமாக செல்லும்?.கவற்ச்சி ஆடை அணிந்த பெண் மீதா? அல்லது பர்தா அணிந்த பெண் மீதா?. இப்படியாக பஸ், ஆபீஸ், தொழில் செய்யும் இடங்கள் எனற அணைத்திலும் பெண்களுடைய இந்த அவல நிலையால் பாதிக்கப்படுவது பெண்கள் தான். இதை உணர்ந்து கொள்ளக் கூடியவர்கள் பர்தாவினுடைய அவசியத்தை புரிந்து கொள்வார்கள். உணர்ந்து கொள்ளாதவர்கள் பெண்களுடைய சுதந்திரம் பர்தாவினால் தான் பறிக்கப் படுகிறது என்று ஓலமிடுவார்கள்.

  2. அழகேசன் Says:

    //ஈவ் டீஸிங்கும், பாலியல் கொடுமைகளும் பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் இந்நாட்களில், பெண்களுக்கு சுய பாதுகாப்பு அவர்களின் சுய நடத்தையில் தான் இருக்கிறது என்பதில் துளி கூட சந்தேகம் இல்லை.//

    நிச்சயமாக. ஆனால் அதற்கு தீர்வு பர்தா போட்டால் கிடைத்து விடும் என்பது சுத்த பைத்தியக்காரத்தனமாக உள்ளது. மிளகாய் பொடியை விட பெரிய பாதுகாப்புப் பொருள் வேறு எதுவும் இல்லை என்பது என் கருத்து.

    //ஆண்கள் தான் ஈவ் டீஸிங்கிற்கு காரணம் என்று கூறுவது தவறு. காரணம் பிரா தெரியும் விதமாக ஜாக்கட் அணிவதும், துடை தெரியும் விதமாக ஸ்கட் அணிவதும்,ஜன்னல் வைத்து ஜாக்கட் போடுவதும் தான் ஈவ் டீஸிங்கிற்கு தலையாய காரணங்கள்.//

    அவரவரின் தனிப்பட்ட உரிமையில் தலையிட எவருக்கும் உரிமை இல்லை. பிரா தெரியும் படியான ஜாக்கட்டுகள் அணுவது அவரவர்களின் மனதையும், உரிமையையும், விருப்பத்தையும் சார்ந்த விஷயம். ஆண்கள் அவ்வாறு செய்கின்றார்கள் என்பதற்காக பெண்கள் தங்களின் விருப்பத்திற்கு எதிராக அடக்கி ஒடுக்கப்பட வேண்டும் என்பது காட்டுமிராண்டித்தனம்.

    பெண்களுக்கு எதிராக கொடுமை இழைப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் வகுத்து அரசு பாதுகாப்பளிக்க வேண்டும் எனக் கோருவதை ஏற்றுக் கொள்ளலாம். ஆண்கள் அவ்வாறெல்லாம் செய்வார்கள் என்பதற்காக பெண்கள் தங்களின் சுய விருப்பப்படி நடக்கக் கூடாது என்பதை தான் பெண்ணடிமைத்தனம் என்கிறோம்.

    ஆண் ஸ்டைலாக சல்வார் அணிந்து வந்தால் பெண்கள் பார்ப்பார்கள், எனவே அவர்களை தூண்டும்படியான சர்வார் அணிவதை ஆண்கள் விடுத்து மற்ற ஆடைகளை தான் அணிய வேண்டும் எனக் கூறினால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியாதோ அது போன்றதே இதுவும்.

  3. அழகேசன் Says:

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழ் குடிமகன்(அப்படியெனில் நாங்கள் எல்லாம் கர்நாடகா குடிமகன்களா? 🙂 ) அவர்களே.

  4. Mayakkannadi Says:

    சுதந்திர இந்தியவின் குடிமக்களாகிய நாம் பர்தா அணியும் வழக்கத்தை அடியோடு ஒழிப்பதுதான் இந்திய பெண்களுக்கு உண்மையான மரியாதை” என்று திருவாய் மலர்ந்துள்ளார் ராஜஸ்தான் கவர்னெர் பிரதிபா பாட்டில். மேலும் முகலாயர்களிடம் இருந்து இந்திய பெண்களை பாதுகாப்பதற்குத்தான் பர்தா அணியும் பழக்கம் ஏற்படுதப்பட்டது என்று கூறியுள்ளார்.அப்படியானால் இந்தியாவில் முஸ்லிம் பெண்கள் மட்டும்தான் பாதுகாப்பு அவசியம் என்று நினைத்தார்களா? மாற்றுமத பெண்களின் பாதுகாப்பு என்ன ஆனது? எல்லா துறைகளிலும் பெண்கள் வேகமாக முன்னேறி வருவதால் பர்தா அணியும் பழக்கத்தை ஒளிப்பது நமது கடமை என்று கூறி அனைவருக்கும் பேரதிர்ச்சி கொடுத்துள்ளர். இன்று சுதந்திர இந்தியாவில் பொது இடங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் இவர் கண்களுக்கு தெரியவில்லையா? அப்படியானால் இந்தியர்களிடம் இருந்து பெண்களை காப்பது எப்படி என்று இவர் சொல்லித்தருவாரா? அல்லது இந்திய பெண்களை இந்தியர்கள் மட்டும்தான் கொடுமைப்படுத்த வேண்டும் என்று கூறுகிறாரா? முஸ்லிம் பெண்கள் மட்டுமே அணியும் பழக்கத்தில் இருக்கும் பர்தாவை ஒளித்துகட்டுவதில் இவருக்கு என்ன லாபம் என்று தெரியவில்லை. தனது பாசிச சிந்தனைக்கு திரிக்கப்பட வரலற்றைத் துணைக்கு கூப்பிடுகிறார்.சங்க் பரிவாரின் திரிக்கப்பட்ட வரலாறுகள் படித்த பொறுப்புள்ள அரசு பதவி வகிப்பவர்களையே இப்படி மாற்றும்பொது இவ்வராலறுகளைப் படிக்கும் குழந்தைகளின் நிலையை சொல்லவா முடியும்.

  5. தமிழ் குடிமகன் Says:

    சகோதரர் அழகேசன் அவர்களுக்காக,

    //நிச்சயமாக. ஆனால் அதற்கு தீர்வு பர்தா போட்டால் கிடைத்து விடும் என்பது சுத்த பைத்தியக்காரத்தனமாக உள்ளது. மிளகாய் பொடியை விட பெரிய பாதுகாப்புப் பொருள் வேறு எதுவும் இல்லை என்பது என் கருத்து. //

    நிச்சயமாக. வெரும் பர்தா போடுவதால் மட்டுமே பெண்களுக்கு பாதுகாப்பு என்று நான் கூறவில்லை.
    ஆனால் பெண்களுக்குரிய பாதுகாப்பில் முதன்மையானது பர்தா . இன்றைய உலக நடைமுறையை நாம்
    அலசிப் பார்த்தால், பாதிப்பிற்கு ஆளாகும் பெண்களின் விகிதாச்சாரம் பர்தா அணியும் பெண்களை விட பர்தா அணியாத பெண்களின் விகிதாச்சாரமே அதிகம்.

    //அவரவரின் தனிப்பட்ட உரிமையில் தலையிட எவருக்கும் உரிமை இல்லை. பிரா தெரியும் படியான ஜாக்கட்டுகள் அணுவது அவரவர்களின் மனதையும், உரிமையையும், விருப்பத்தையும் சார்ந்த விஷயம். ஆண்கள் அவ்வாறு செய்கின்றார்கள் என்பதற்காக பெண்கள் தங்களின் விருப்பத்திற்கு எதிராக அடக்கி ஒடுக்கப்பட வேண்டும் என்பது காட்டுமிராண்டித்தனம்.//

    வீட்டிற்க்குள் ஒரு பிரச்சினையென்றால்தான் அது அவரவர் தனிப்பட்ட உரிமை என்று கூற முடியும். ஆனால் அது ரோட்டிற்கு வந்து விட்டால் அதை யார் வேண்டுமானாலும் தட்டி கேட்கலாம். ஒரு சாதாரனமான ஆடை சம்மத்தப்பட்ட விசயத்தில் அவரவர் மானத்தை காக்கும் பொருட்டு இவ்வாருதான் ஆடை அணிய வேண்டும் என்று கூறினால், அது அடக்கி ஒடுக்கக் கூடிய காட்டுமிராண்டித்தனமா? இல்லை அவர்களுக்கு அளிக்கப்படக்கூடிய பாதுகாப்பா?. நோக்கத்தை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.

    //ஆண்கள் அவ்வாறெல்லாம் செய்வார்கள் என்பதற்காக பெண்கள் தங்களின் சுய விருப்பப்படி நடக்கக் கூடாது என்பதை தான் பெண்ணடிமைத்தனம் என்கிறோம்.//

    மதுபானக் கடைகளை திறந்து வைத்து விட்டு மது அருந்த கூடாது என்று சொல்வது சரியா? அது போல் தான் நீங்கள் மேலே குறிப்பிட்டு இருப்பதும்.
    கனவன் மட்டுமே பார்த்து ரசிக்கப்பட வேண்டிய ஒரு பெண் மற்ற ஆடவரும் பார்க்கும் விதத்தில் செல்லும்போதுதான் அனைவராலும் அடிமைபடுத்தப்படுகிறாள்,போதைபொருளாக ஆககப்படுகிறாள். ஒரு பெண்ணின் அங்க அவயங்களை போதுமான அளவிற்கு மறைக்கக் கூடிய ஒரு பக்குவம்தான் பர்தா. நிச்சயமாக இது பெண்ணடிமைத்தனமாக இருக்க முடியாது.

    //ஆண் ஸ்டைலாக சல்வார் அணிந்து வந்தால் பெண்கள் பார்ப்பார்கள், எனவே அவர்களை தூண்டும்படியான சர்வார் அணிவதை ஆண்கள் விடுத்து மற்ற ஆடைகளை தான் அணிய வேண்டும் எனக் கூறினால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியாதோ அது போன்றதே இதுவும்.//

    ஒரு ஆண் அணியக்கூடிய ஆடையையும் ஒரு பெண் அணியக்கூடிய ஆடையையும் ஒப்பிடுவது அறிவுக்கு பொருததமான ஒன்றா? ஒரு ஆண் டவ்சர் போட்டுக்கொண்டு போனால் கூட யாருக்கும் பெரியதாக தெரியாது. ஆனால் ஒரு பெண் சற்று குறைவாக ஆடை அணிந்து சென்றாலும் கூட அவள் தான் அங்கு காட்டுமிராண்டித்தனமான பார்வைக்கும், செயலுக்கும் ஆளாகிறாள்.

  6. kadher Says:

    yevan oruvan thanathu ammavaiyum, akkavayum thavarana konathil parkka ninairano avane nallavan entrum.
    avane uthaman entrum prathipa sollamal vittu vitar. enivarum kalam penkalai 3 stricker mattume pothum entru sollvarkal naam arasiyal naykal.atharkku ammam podu nam theru poriki naykal


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: