பாம்பு பால் குடிக்குமா?

பாம்பு பால் குடிக்குமா?

பாம்புகளில் சில பாம்புகள் மட்டும் நச்சுத் தன்மை கொண்டவை. பெரும்பாலான பாம்புகள் நச்சுத்தன்மை அற்றவை. அவை கடித்தால் தடிப்பு, சொறி, உடல் வீக்கம் ஏற்படும், உயிருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. விரியன் பாம்புகள் மிகவும் கொடிய நச்சைக் கொண்டவை. கடித்த சில மணித்துளிகளிலே உயிரைக் குடிக்கும் தன்மை உடையவை.

பாம்புகள் பெரும்பாலும் இருட்டிய பிறகே இரை தேடப் புறப்படுகின்றன. எலி, தவளை, சிறுசிறு பூச்சிகள், மற்ற பறவைகளின் முட்டைகள் ஆகியவற்றை உணவாகக் கொள்கின்றன. சில பாம்புகள் மற்ற வகைப் பாம்புகளையே உண்ணக் கூடியவை. பாம்புகளில் மிகவும் எடையும், வலுவும், நீளமும், கொண்டவை மலைப்பாம்புகள்.

பாம்புகள் அந்த இனங்களிலேயே தங்களுக்கு இணைகளைத் தேடிக் கொள்கின்றன. பாம்புகள் முட்டையிட்டு அடைகாக்கும் தன்மை கொண்டன. பெரும்பாலும் ஆண் பாம்புகளே அடை காக்கின்றன. இடத்திற்கும், தட்ப வெப்ப நிலைக்கும் ஏற்ப பாம்புகள் வெண்மை, மஞ்சள், கருமை, நீலம், பச்சை, சிவப்பு, பழுப்பு மற்றும் பல வண்ணங்களில் மணமும் பல வகையாக உள்ளன.

பாம்புகளுக்கு காதுகள் கிடையாது பாம்பின் கால் பாம்பறியும், கட்செவி போன்றவை பாம்பைப் பற்றி ஆராய்ச்சி அறிவு இல்லாத காலத்தில் கூறப்பட்டவையாகும். பாம்பாட்டி மகுடியை அப்படியும் இப்படியும் அசைத்து ஆட்டும் போது பாம்பும் தன் பார்வையை மகுடி மீது செலுத்தி அதற்கேற்றவாறு அசைவதைத்தான் “மகுடியின் இசையில் தான் பாம்பு ஆடுகிறது” என்று தவறாகக் கூறுகிறார்கள்.

பாம்பு தன் அடி வயிற்றிலுள்ள செதில்கள் போன்ற அமைப்பு மூலம் தரையைப் பற்றி (மண்புழு போன்றே) முன்னுக்கு நகர்கிறது. மண்புழுவிற்கு முன் பக்கம் மட்டுமே அந்த அமைப்பு உள்ளது. ஆனால், பாம்புக்கோ கழுத்திலிருந்து வால் வரை செதில் அமைப்பு உண்டு. இதனால் தான் மிக வேகமாக நகர முடிகிறது.

பாம்புகளுக்கு அதிர்வுகளை உணரும் திறன் உண்டு. மனிதனோ, விலங்கோ, நெருங்கும் போது, நிலத்தில் ஏற்படும் அதிர்வலைகளைப் பாம்புகள் தங்கள் வயிற்றுப்புறச் செதில்கள் மூலம் உணர்ந்து அதற்கேற்றவாறு தன் திசையை மாற்றி எதிரிகளிடமிருந்து தப்பித்துக்கொள்ளும்.

பாம்புகளுக்கு நாக்கு பிளவுபட்டு கம்பிகள் போல் இருக்கும். எனவே, பாம்பு பாலையோ நீரையோ நக்கிக் குடித்திட முடியாது. கிண்ணத்தில் பாலை வைத்தால் பாம்பு உறிஞ்சிக் குடிக்கிறது என்று பக்தர்கள் கூறுகிறார்கள். இது மிகவும் அறியாமையாகும். பாம்புக்கு அதன் தலையின் நுனிப் பகுதியில் மூக்கு உள்ளது. அது நீர்மப் பொருளில் வாயை வைக்கும்போது முதலில் நுழைவது மூக்காகத்தான் இருக்கும். மூக்கை நீரிலோ, பாலிலோ நுழைத்தாலே பாம்பு மூச்சுத்திணறிச் செத்து விடும். இதை அறியாதோர்தான் பாம்பு பால் குடிக்கிறது என்று தவறாகச் சொல்லி வருகின்றனர்.

மேலும் முட்டையைக் கூட உடைத்து உறிஞ்சிக் குடிப்பதாகவும் பக்தர்கள் சரடு விடுகிறார்கள். பாம்பு இரையை (எலி, தவளை போன்றவற்றை) அப்படியே விழுங்குமேயன்றி மென்று சாப்பிடக் கூடிய அமைப்பு கிடையாது. எனவே முட்டையையும் பாம்பு விழுங்குகிறதேயன்றி உடைத்து உறிஞ்சிக் குடிக்காது.

பாம்புகள் அதன் இனத்திலேயே இணைந்து இனப்பெருக்கம் செய்கின்றன. ஆனால், நல்ல பாம்பும், சாரைப்பாம்பும் தான் இணைகின்றன என்ற தவறான கருத்தினைக் கூறி வருகிறார்கள். பறக்கக் கூடிய பறவைகள் எல்லாம் ஒரே இனத்தைச் சேர்ந்திருப்பதால் கோழி, கொக்குடன் இணையுமா? கழுகு, வவ்வாலுடன் இணையுமா? காக்கை குயிலுடன் இணை யுமா? குருவி, கரிச்சானோடு இணையுமா? வாத்து வான்கோழியுடன் இணையுமா? இவை எப்படிச் சாத்தியமில்லையோ அப்படித் தான் பாம்பின் சேர்க்கையும் ஆகும்.

நன்றி: உண்மை மாதமிருமுறை இதழ்

படித்தது

தகவல் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

வடமொழியை கொல்லும் தமிழ்சொற்கள்.

சாந்தம் – அடக்கம்
சாந்தி – அமைதி
சாரம் – சாறு; பிழிவு
சாராம்சம் – சாறு; பிழிவு
சாத்தியமான – இயலக்கூடிய
சாம்ராச்சியம் – பேரரசு
சிகரம் – உச்சி; முகடு
சிகை – தலைமயிர்
சிரம் – தலை
சிரசு – தலை
சிங்கம் – அரிமா
சிங்காரம் – ஒப்பனை; அழகு
சிசு – குழந்தை; சேய்
சித்தப்பிரமை – மனமயக்கம்
சிகிச்சை – மருத்துவம்
சித்தாந்தம் – கோட்பாடு
சிந்தனை – எண்ணம்
சிரமம் – கடுமை
சிலை – படிமம்
சிநேகம் – நட்பு
சிருங்காரம் – காமம்
சிதிலம் – சிதைவு
சீக்கிரமாக – சுருக்காக
சீதபேதி – வயிற்றுக்கடுப்பு
சீலம் – நல்லொழுக்கம்
சீ(ஜீ)ரணம் – செரிமானம்
சீ(ஜீ)வன் – உயிர்
சீ(ஜீ)வனம் – பிழைப்பு
சுகம் – நலம்
சுலபம் – எளிது
சுகவீனம் – நலக்குறைவு
சுகாதாரம் – நலவாழ்வு
சுத்தம் – தூய்மை
சுத்திகரிப்பு – துப்புரவு
சுதந்திரம் – விடுதலை; தன்னுரிமை
சுந்தரம் – எழில்
சுபம் – நன்மை
சுபீட்சம் – செழிப்பு
சுபாவம் – இயல்பு
சுய(நலம்) – தன்(னலம்)
சுயமாக – தானாக, சொந்தமாக
சுவாசம் – மூச்சு
சுரணை – உணர்ச்சி
சுயாதீனம் – தன்னுரிமை
சு(ஜு)வாலை – தீக்கொழுந்து
சுயேச்சை – தன்விருப்பம்
சூட்சுமம் – நுட்பம்
சூசகம் – மறைமுகம்
சூத்திரம் – நூற்பா
சூன்யம் – வெறுமை; பாழ்; இன்மை
சேட்டை – குறும்பு
சொகுசு – பகட்டு
சொப்பனம் – கனவு
சொற்பம் – சிறுமை; கொஞ்சம்
சோகம் – துயரம்
சோதனை – ஆய்வு
சோரம் – கள்ளம்
சவுக்யம் – நலம்
சவுபாக்யம் – நற்பேறு
ஞாபகம் – நினைவு
ஞானம் – அறிவு
தண்டனை – ஒறுத்தல்
தத்துவம் – மெய்யியல்; மெய்யுணர்வு; மெய்ப்பொருளியல்
தயவு (தயை) – இரக்கம்
தயாளம் – இரக்கம்
தந்தி – தொலைவரி
தயிலம் – எண்ணெய்
தரிசு – வறள்நிலம்; விடுநிலம்
தருணம் – வேளை
தனம் – செல்வம்
தரித்திரம் – வறுமை
தயாரிப்பு – விளைவாக்கம்
தகனம் – எரியூட்டல்
தய்ரியம் – துணிச்சல்
தானம் – கொடை
தாகம் – நீர்வேட்கை
தாசன் – அடியான்
தாட்சண்யம் – கண்ணோட்டம்; இரக்கம்
தாமதம் – காலநீட்சி; காலத்தாழ்ச்சி; நெடுநீர்
திடம் – திண்மை
திடகாத்திரம் – உடலுறுதி; உடற்கட்டு; கட்டுடல்
தியாகம் – ஈகம்
திரவம் – நீர்மம்
திரவியம் – செல்வம்
திராணி – தெம்பு; வலிமை

<a href = http://www.keetru.com/info_box/general/tamil.html&gt; கண்டெடுத்தது</a>

தகவல் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

“மே”யின் சிறப்புக்கள்!

மே 17 1981இல் தமிழகமெங்கும் மனுதர்ம நகல் எரிப்புக் கிளர்ச்சியை தி.க. நடத்தியது.

மே 18 1872இல் பெட்ரண்ட் ரஸ்ஸல் பிறந்தார்.

மே 19 2001இல் எஸ்.தவமணிராசன் மறைந்தார்.

மே 20 1845இல் அயோத்திதாசப் பண்டிதர் பிறந்தார்.

மே 21 1959இல் டாக்டர் தருமாம்பாள் மறைந்தார்

மே 22 1939இல் இந்தி எதிர்ப்புப் போரில் சிறை சென்ற பெரியார் விடுதலையானார்

1772இல் ராஜாராம் மோகன்ராய் பிறந்தார்

மே 23 1957இல் உயர்நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பெரியார் அறிக்கை அளித்தார்.

மே 24 1967இல் திருவாரூர், விடயபுரத்தில் கடவுள் மறுப்பு வாசகத்தை பெரியார் உருவாக்கினார்.

மே 27 1953இல் தமிழகமெங்கும் விநாயகன் உருவபொம்மை உடைப்புக் கிளர்ச்சியை பெரியார் நடத்தினார்.

மே 30 1778இல் வால்டேர் மறைந்தார்.

மே 31 1981இல் சிங்கள வெறியர்களால் யாழ் நூலகம் எரிக்கப்பட்டது.

படித்தது

தகவல் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

பிரபஞ்சம் தோன்றியது எப்படி?

நம்முடைய பிறந்த நாளை நம்முடைய பெற்றோர்கள் கூறித்தான் நமக்குத் தெரியும். இது போலவே, அவர்களின் பிறந்தநாளை அவர்களது பெற்றோர் கூறி அவர்களுக்குத் தெரியும்.
இப்படியே கூறிக்கொண்டே போகலாம். என்றாலும், நமது மூதாதையர்களைப் பற்றிய வரலாற்றை இரண்டு அல்லது மூன்று தலைமுறைக்கு மேல் நாம் அறிந்திருக்க முடியாது!
நமது மூதாதையர்களுக்கும் முன்னோடியாக குரங்கு இனம் இருந்து வந்ததாக அறிவியல் கூறுகிறது. (சார்லஸ் டார்வின் தமது ஆய்வில் குறிப்பிடுகிறார்) இதையே நாம் ஒப்புக்கொண்டு மேலும் விவரங்கள் அறிய முற்படுவோமேயானால்:
இவர்கள் காலத்திற்கும் முன்னால் நமது உயிர்த்தோற்றம் அமீபாக்கள் என்று கூறப்படும் சின்னஞ்சிறு உயிர்களில் தோன்றி, காலப்போக்கில் இரு கால்களும், அவற்றில் பத்து விரல்களும், இவைகளை இயக்கும் நரம்புத் தொடர்களும், இவைகளின் மூலம் இயக்கப்படும் ஒரே ஒரு மூளையும், இந்த மூளையில் அடங்கப்பெற்ற செல்களைத் துளைத்தெடுக்கும் பல்வேறு கேள்விகளும், அதற்குப் பதில்களும் கூறக்கூடிய மனித இயந்திரமாக இன்று மனிதன் உருவகப்பட்டிருக்கிறான்.
பிரபஞ்சத்தில் நிகழப்பெற்ற எந்த ஒரு கேள்விகளுக்கும் – பிரச்சினைகளுக்கும் பதில் கூறும் ஒரே ஒரு உயிர் “மனிதன்” மட்டும்தான் என்பதை பெருமையோடு ஒப்புக்கொள்வோம்.
இன்று நம் முன்னே தோன்றப்படும் எந்த ஒரு பொருளை எடுத்துக்கொண்டாலும் அது எப்படித் தோன்றியது என்ற வினா எழுப்பி, அதற்குப் பதில் கூறும் நிலையில் இன்று அறிவியலில் வளர்ந்திருக்கிறான் மனிதன்.
அந்த அடிப்படையில் இப்பிரபஞ்சப் பொருட்களின் தோற்றம் எப்படித் தோன்றியது? என்று பல்வேறு அறிஞர் பெருமக்கள் தமது ஆராய்ச்சி மூலம் கருத்துகளை வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
அந்தக் கருத்துகளை இங்கே பகிர்ந்து கொள்வதுடன், நமது கருத்துகளையும் முன்வைக்க கடமைப்பட்டுள்ளோம்.
பிரபஞ்சம் உருவான கட்டத்தில் மிகப் பெரிய வெடிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்; அப்படி ஏற்பட்ட வெடிப்பின் மூலம் சிதறி ஓடப்பெற்ற பொருட்கள் இந்த நிமிடம் வரை விண்வெளியில் தொடர் ஓட்டமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று கூறுகிறார் பெல்ஜிய வான ஆராய்ச்சியாளர் ஷேர்த் லேமாத்ரே (Georges Lemaitre) என்ற அறிஞர்.

நினைத்துப் பார்க்க முடியாத அமுக்கத்தில்; அதாவது, ஒரு தேக்கரண்டி அளவுள்ள பொருள் கிட்டத்தட்ட 10 கோடி டன் எடையுள்ளதாக இருந்தால் எந்த அளவுக்கு அமுக்கம் நிறைந்திருக்குமோ அந்த அளவு திணிவு கொண்ட பொருளாக இருந்து, “பெரும் டமார்” என்ற சத்தத்துடன் வெடித்துச் சிதறியிருக்க வேண்டும்; என்று கூறும் அவர்,
இந்நிகழ்வு ஏற்பட்டு கிட்டத்தட்ட எழுநூறு கோடி ஆண்டுகள் கடந்திருக்கும் என்கிறார்.

பிரபஞ்சம் மேலும் மேலும் பெரிதாகி வரும் நிகழ்வினை கவனிக்கிற போது, அது புறப்பட்ட ஆரம்பம் என்று ஒன்று இருந்து அதிலிருந்து தொடர் ஓட்டமாக விரிந்துகொண்டே செல்கிறது என்று கூறுகிறார்.
பிரபஞ்சம் உருவாகி எழுநூறு கோடி ஆண்டுகள் இருக்கலாம், என்ற இக்கருத்தில் சில தவறுகள் தொக்கிக் கொண்டிருக்கின்றன.
ஒரு ஆண்டு என்பதே பூமியின் 365 சுற்றுக்களுக்குள் நிறைவடையும் ஒரு அலகு. பொருள் வெடித்து, அது சிதறி ஓடி, ஓடிய பாதையில் ஆங்காங்கே நட்சத்திரங்களாகவும், கிரகங்களாகவும் இடம் பெற்று அது தன்னைத் தானே சுற்றிக்கொண்டதில் கணிக்கப்பட்டது தான் நமது பூமியின் தோற்றம். ஒரு ஆண்டு கணக்கு.
பூமியின் 365 சுழற்சி கொண்டதுதான் ஒரு வருடம் என கணக்கிட்டு, அதை நமது நடைமுறைக்கு வழமையாக்கி வருகிறோம்.
எனவே இந்தச் சுழற்சி கணக்கீட்டின் மூலம் பிரபஞ்சத் தோற்றம் ஏற்பட்ட காலக்கணக்கை வகைப்படுத்துவது என்பது எப்படிப் பொருந்தும்? எனவே,
இக்கருத்து சரியானது இல்லை.
திணிவு மிக்க மொத்தை உருவம் ஒன்று வெடித்துச் சிதறி, ஓடியதின் தொடரில் தான் பிரபஞ்சப் பொருள் அனைத்தும் உருவாகியிருக்க வேண்டும் என்ற இக்கருத்து அமெரிக்கப் பவுதீக விஞ்ஞானி ஜார்ஜ் காமோவ் (George Gamow) என்பவரும் ஒப்புக்கொள்கிறார்.
* இன்று காணப்படும் பிரபஞ்சப் பொருள் அனைத்தும் அடர்த்திக்கொண்ட மொத்தையாக ஒரு கட்டத்தில் இருந்திருக்கிறது.
* இந்த மொத்தை 2500 கோடி டிகிரி பாரன்ஹைட் வெப்பத்தில் வெடித்துச் சிதறியிருக்கிறது.
*வெப்ப நிலை 50 லட்சம் டிகிரி பாரன்ஹைட்டாகக் குறைந்து மூலகங்கள் உருவாகி இருக்கிறது.
* வாயு நிலையில் இந்த பொருட்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து, ஈர்த்து, முகில்களாகப் பிரியச் செய்து நட்சத்திரங்களாகவும், கிரகங்களாகவும் உருப்பெற்றிருக்கின்றன என்ற இக்கருத்தை ஜார்ஜ் காமோவும் ஒப்புக்கொள்கிறார்.
மேற்கண்ட இக்கருத்தின் மூலம், பரிணாம வளர்ச்சியின் பல படிக்கட்டுகளை கடந்து இன்று, ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளுக்குப் பதில் கண்டுபிடிப்பவர்களாக இருக்கிறோம்.
பெரும் பிண்டம் வெடித்துச் சிதறியதன் மூலம் அண்டங்கள் விரிவடைகின்றன என்ற கருத்தை ஒப்புக் கொள்வதாக இருந்தால், வெடித்துச் சிதறியதற்கு முந்தைய கட்டம் மற்றும் ஆரம்ப இடம் எங்கிருக்கிறது என்ற வினா எழுகிறது.
தவிர, வெடிப்புக்கு முந்தைய கட்டத்தில் விண்வெளி முழுமையும் வெறும் வெற்றிடமாக இருந்ததா? அவை வெடித்துச் சிதறி ஓடும் பாதைகளில் தடுப்பலைகள் இருந்து அதையும் கடந்து சென்றனவா என்பன போன்ற நியாயமான கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்கின்ற இடத்திலே இருக்கிறோம். வேறு சில விஞ்ஞானிகள் தூசுப் படலம் தோன்றி, காலப் போக்கில் அவைகள் ஒன்றோடொன்று திரண்டு, திரட்சிகளாகி அதுவே, நட்சத்திரங்களாகவும், கிரகங்களாகவும் உருப்பெற்றிருக்கலாம் என்ற கருத்தை முன் வைக்கின்றனர்.
அறிவியல் வளர்ச்சியின் வேகம் புதிர்களுக்கு விடை காண்பதுதான் என்பதிலே பெருமை கொள்வோம்.

படித்தது…

தகவல் இல் பதிவிடப்பட்டது . 6 Comments »

உலக நிகழ்வுகள் குறித்து!

உலக முக்கிய நிகழ்வுகளை ஓரிடத்தில் தொகுக்க பல நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தன் வெளிப்பாடே இந்த “உலக நிகழ்வுகள்” வலைப்பூ.

தொடர்ந்து உலகின் முக்கிய நிகழ்வுகளை – நிகழ்ந்தவை மற்றும் நிகழ்ந்துக் கொண்டிருப்பவைகளை –  இவ்வலைப்பூவில் காணலாம்.

அழகேசன்.

தகவல் இல் பதிவிடப்பட்டது . 1 Comment »