இஸ்ரேலிடம் இருந்து நவீன புளு ஹொரிசோன் – 02 எனப்படும் ஆளில்லாத உளவு விமானங்களை வாங்குவதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியான இந்த விமானங்களை இலங்கை அரசு எவ்வித பரிசோதனைகளையும் மேற்கொள்ளாமலும், வேறு நாடுகளிடம் இருந்து கேள்விப்பத்திரங்களை(Tenders) கோராமலும் வாங்க முடிவெடுத்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இந்த உளவு விமானங்கள் தொடர்பாக மேலதிக தகவல்களை அறிய பயணம் மேற்கொண்ட இலங்கையின் பாதுகாப்புத்துறை மற்றும் வான்படை அதிகாரிகள் குழுவில் இடம்பெற்றிருந்த மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரும், பாதுகாப்புத்துறை ஆலோசகருமான முனிந்திரதாச உடல்நிலை பாதிக்கப்பட்டு இஸ்ரேலில் மரணமாகியிருந்தார்.
முனிந்திரதாச ஆளிலில்லாத உளவு விமானங்கள் தொடர்பான தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதற்கு முன் இந்தியாவில் காஷ்மீர் தீவிரவாதிகளை எதிர்கொள்வதற்காக இந்திய இராணுவத்தினருக்கு பயிற்சியளிக்க இஸ்ரேலிய மொசாத் மற்றும் இராணுவ உயாரதிகாரிகள் இந்தியா வந்தடைந்ததுகவனிக்கப்படவேண்டிய விஷயமாகும்.