தமிழீழ தேசியத் தலைவரிடம் கருணா அம்மானின் நிதி மோசடி தொடர்பான விடயங்களை விளக்கமாக தெரிவித்தார் அந்த நிதித்துறைப் போராளி. தமிழீழ தேசியத் தலைவரால் அந்த நிதித்துறைப் போராளி கருணாவின் நிதி மோசடி தொடர்பாக மட்டக்களப்பு தேனகம் சென்று மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்துமாறு பணிக்கப்படுகிறார். இதற்கிடையில் தமிழீழ தேசியத் தலைவர் கருணாவுடன் தொலைத் தொடர்பு கருவி மூலம் தொடர்பை ஏற்படுத்தி கருணா உன்மீது ஒரு சில முறைபாடுகள் வந்துள்ளன; அதை தெளிவுபடுத்த வன்னி வருமாறு அன்பாக அழைத்தார். நிதி மோசடி தொடர்பான விடயங்கள் ஏதோ ஒரு வகையில் தமிழீழ தேசியத் தலைவருக்கு தெரிந்து விட்டதை அறிந்த கருணா, வருவதாக அறிவித்து விட்டு அக்காலப் பகுதியை மட்டக்களப்பில் தன்னை பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.
இத்தருணம் கருணாவின் நிதிமோசடி தொடர்பான விடயம் அறிந்த சாட்சியாக கம்சன் என்ற போராளியே இருந்தான். அந்த சாட்சியை எப்படியும் கொல்லவேண்டும் என்று கருணா பலமுயற்சிகளை மேற்கொண்டிருந்த சமயம் கம்சன் என்ற போராளிக்கு மலேரியா காய்ச்சல் வந்து விட்டது. வழமையாக காய்ச்சல் மற்றும் நோய்கள் வரும்போது விடுதலைப் புலிகளின் மெடிக்ஸில் தங்கி நின்று வருத்தத்தை(நோயை)க் குணப்படுத்துவது வழக்கம்.
அந்த வகையில் கம்சன் என்ற போராளியும் விடுதலைப் புலிகளின் மருத்துவ மனைக்கு அனுப்பப்படுகிறார். கம்சன் தங்கியிருந்த மருத்துவ மனையில் பணியாற்றிய மருத்துவர்களில் ஒருவர் கருணாவின் அன்புக்குரிய தீவிர விசுவாசி. அந்த மருத்துவ போராளியை கருணா அணுகி அப்போராளியை கொல்லுவதற்கான சதித்திட்டத்தை போடுகிறார்.
இந்த கொலைச் சதித்திட்டத்தை மிக இரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்றும், இந்த விடயம் வெளியில் தெரியும் பட்சத்தில் மருத்துவப் போராளியை கொன்றுவிடுவதாகவும் கருணா விரட்டியுள்ளார். இதற்கமையவே இருவருமாகச் சேர்ந்து கம்சன் என்ற போராளியை கொல்லுவதற்கான சதித்திட்டம் தீட்டப்படுகிறது.
நிதித்துறைப் போராளி தேசியத் தலைவரிடம் தகவலைத் தெரிவித்து விட்டு வருவார் என எதிர்பார்த்திருந்த கம்சனுக்கு சாவு மிக அருகில் வந்துகொண்டிருந்தது.
கருணாவும் அந்த மருத்துவ போராளியுமாக இணைந்து மலேரியா நோயில் பீடிக்கப்பட்ட கம்சனுக்கு மருத்துடன் மருந்தாக விச ஊசியை ஏற்றி கொல்வதே இருவருடைய கொலைத் திட்டமாகும். இத்திட்டத்தின் அடிப்படையில் மருத்துவப் போராளி கம்சனுக்கு விச ஊசியை ஏற்றி கொலை செய்கிறான்.
கருணாவுக்கு சற்று நின்மதி(எதிராக) இருந்த சாட்சியை ஒருவாறு கொலை செய்விட்டாச்சு(செய்தாகி விட்டது). அடுத்து கொலை செய்யப்பட்ட போராளியை எப்படி இயற்கை சாவாக மாற்றுவது; மற்றவர்களை எப்படி நம்ப வைப்பது என கருணா சிந்திக்கிறார்.
(தொடரும்)
மறுமொழியொன்றை இடுங்கள்