திரு.கருணா அம்மான் அவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்றதோடு தமிழ் தேசியத்திற்கு பாரிய துரோகத்தை செய்து விட்டு சிறீலங்கா இராணுவத்தினரின் கைக்கூலியாக மாறி இன்று நடைபிணமாக மரணத்தின் விழிம்பில் நின்று விம்மி விம்மி அழுத வண்ணம் இருக்கின்றார்.தமிழீழ தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்த கருணா அம்மான் விடுதலைப் புலிகள் அமைப்பில் கட்டளைத் தளபதியாக இருந்த வேளையில் சமாதான காலத்தை அடுத்து வெளிநாடுகளுக்கான பயணங்களையும் மேற்கொண்டிருந்தார்.வெளிநாடுகளுக்கான பயணத்தின் போது அவருக்கு இருந்த தாய் மண் மீதான பற்று படிப்படியாக குறைந்து காலப் போக்கில் பெண் ஆசை, பொன் ஆசை மீது அளவு கடந்த பற்றும் மரியாதையும் வளரத்தொடங்கியது.
மனைவி மீது அளவு கடந்த பற்று கொண்டதால் விடுதலைக்காக கொடுக்கப்பட்ட குறிப்பிட்ட தொகை இலட்சம் ரூபாக்களை தனது மனைவியின் செலவுக்காக கொடுத்திருந்தார். குறிப்பாக மனைவி மலேசியா செல்ல புறப்பட்ட சமயம் பயுறோ வாகனத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு செல்கின்றார். அதே இடத்திற்கு கருணாவோடு இரு போராளிகளும் செல்கின்றனர். குறிப்பிட்ட இடத்தில் மனைவியின் பயுறோ வாகனம் தரித்து நிற்க அதே இடத்தில் கருணாவின் பயுறோ வாகனமும் படு வேகமாக வந்து தரித்தது.
உடனடியாக பயுறோ வாகனங்களின் பின்புற கதவுகள் திறக்கபட்டன. அந்த இடைவெளியில் ஒரு சூட்கேஸ் கருணாவால் திறந்து பார்க்கபட்டு தனது ஆசை மனைவிக்கு அந்த பணப் பெட்டியை தானம் செய்கிறார். அங்கே தான் கருணா அம்மான் தமிழர் தாயகத்திற்கும், தமிழர் தேசியத்திற்கும், தேசியத் தலைவனுக்கும், தமிழ் மக்களுக்குமான முதலாவது துரோகத்தை இழைக்கிறான். சூட்கேசினை கருணா அம்மான் திறந்து பார்க்கும் போது கம்சன் என்ற போராளி சூக்கேசினுள் இருந்த குறிப்பிட்ட இலட்சம் ரூபாக்களை பார்த்து விட்டான். கருணாவின் துரோகச் செயலை அவனது மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. கம்சன் உடனடியாக கருணா அம்மானின் வாகனச் சாரதிக்கு இரகசியமாக தகவலைத் தெரிவிக்கின்றான்.
பாவம் கம்சன் வாகனச் சாரதியோ கருணா அம்மானின் நெருங்கிய விசுவாசி. இதனை கம்சன் எந்தவொரு காலத்திலும் அறிந்திருக்கவில்லை. வாகனச்சாரதியோ விசயத்தை காதும் காதுமாக கருணா அம்மானிடம் தெரியப்படுத்தினான்.விசயம் அறிந்த கருணா அம்மான் இந்த விசயம் இயக்கத்திற்கு தெரிந்தால் அமைப்பில் சுடப்போகிறார்களே என்று அஞ்சி மண்டை எல்லாம் குழம்பிப் போய், என்ன செய்வது என்று தெரியாத நிலையில் நிலை தடுமாறி நின்ற சமயம் கம்சன் என்ற போராளி தனது நிதிப் பொறுப்பாளரிடம் கருணா அம்மானின் நிதி மோசடியை விரிவாகத் தெரிவித்தான். நிதித்துறைப் போராளியோ தகவலை எடுத்துகொண்டு வன்னி சென்று தேசியத் தலைவரிடம் தகவலைத் தெரிவிக்கின்றான்.
(தொடரும்)
மறுமொழியொன்றை இடுங்கள்