புலிகளுக்கு எதிராக இஸ்ரேல்!

இஸ்ரேலிடம் இருந்து நவீன புளு ஹொரிசோன் – 02 எனப்படும் ஆளில்லாத உளவு விமானங்களை வாங்குவதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியான இந்த விமானங்களை இலங்கை அரசு எவ்வித பரிசோதனைகளையும் மேற்கொள்ளாமலும், வேறு நாடுகளிடம் இருந்து கேள்விப்பத்திரங்களை(Tenders) கோராமலும் வாங்க முடிவெடுத்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இந்த உளவு விமானங்கள் தொடர்பாக மேலதிக தகவல்களை அறிய பயணம் மேற்கொண்ட இலங்கையின் பாதுகாப்புத்துறை மற்றும் வான்படை அதிகாரிகள் குழுவில் இடம்பெற்றிருந்த மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரும், பாதுகாப்புத்துறை ஆலோசகருமான முனிந்திரதாச உடல்நிலை பாதிக்கப்பட்டு இஸ்ரேலில் மரணமாகியிருந்தார்.

முனிந்திரதாச ஆளிலில்லாத உளவு விமானங்கள் தொடர்பான தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதற்கு முன் இந்தியாவில் காஷ்மீர் தீவிரவாதிகளை எதிர்கொள்வதற்காக இந்திய இராணுவத்தினருக்கு பயிற்சியளிக்க இஸ்ரேலிய மொசாத் மற்றும் இராணுவ உயாரதிகாரிகள் இந்தியா வந்தடைந்ததுகவனிக்கப்படவேண்டிய விஷயமாகும்.

இலங்கை, செய்திகள் இல் பதிவிடப்பட்டது . 1 Comment »

ஒரு பதில் to “புலிகளுக்கு எதிராக இஸ்ரேல்!”

  1. தேவன் Says:

    புலிகளை எதிர்கொள்ளும் போருக்கு, ஆயுத தொழில்நுட்ப்பத்தால் அடையும் வலிமை ஒரு பொருளாகுமா? என்று இந்த முப்பது வருட போரில் இருந்து கூட இன்னும் அரசால் படிக்க முடியாத பாடமாய் இருக்கிறதே!
    அவர்கள் AK47 வைத்திருந்த போது அதனாலேயே வாங்கிக் கட்டினார்கள், பின்பு பல்குளல் பீரங்கிகள் வைத்திருந்த போதும் அதனாலேயே வாங்கிக் கட்டுகிறார்கள். எனவே இந்த இறக்குமதிகளின் பாதிப்புக்கள் அவர்களுக்குத்தான் என்பதை ஏன் இன்னும் உண்ர்கிறார்கள் இல்லை!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: