விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நெல்லை பொருட்காட்சி மைதானத்தில் நேற்று நடைபெற்ற மண்ணுரிமை மாநாட்டில் கருணாநிதி கலந்து கொண்டு பேசும் பொழுது, “இந்த மாநாட்டில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற வேண்டுமானால் சாதி ஒழிய வேண்டும்” என்று கூறிய கருணாநிதி, “சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பே இந்த கருத்தை வலியுறுத்தி தாம் நாடகம் எழுதியதாக” கூறினார்.
“இந்த கருத்தை வலியுறுத்தி திருமாவளவன் நிறைவேற்றியிருக்கும் தீர்மானத்தின் மீது தம்மால் ஆன நடவடிக்கைகளை எடுப்பேன்” என்றும் முதல் அமைச்சர் கருணாநிதி கூறினார்.
“சாதிகள் ஒழிய வேண்டுமானால் திருமாவளவன் போன்றவர்கள் சம்பந்தப்பட்ட மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும்” என்றும் கருணாநிதி கேட்டுக் கொண்டார்.
“பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய பெரியார், அண்ணா போன்ற தலைவர்களை அந்த மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால், அவர்களால் சாதி ஒழிப்பில் முழு வெற்றியை அடையமுடிய வில்லை” என்றும் அவர் கூறினார்.
கடந்த முறைக்கு முந்தைய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அன்று முளையெடுத்த தலைவனை மட்டுமே கொண்ட சாதி கட்சி முதல் மாடன், சுள்ளன், குப்பன் என ஒரு சாதியையும் விடாமல் அனைத்து சாதி கட்சிகளை தேடிப்பிடித்து கூட்டணி வைத்துக் கொண்ட பகுத்தறிவு காவலர் கருணாநிதி பேசும் பேச்சா இது என ஆச்சரியப்படுபவர்கள் அவர் தற்போது ஓர் தரமான இந்திய குறிப்பாக தமிழக அரசியல் களத்தில் கொட்டை போடும் அரசியல்வாதி என்பதை நினைவில் கொள்க.
மறுமொழியொன்றை இடுங்கள்