மேடைகளிலும், சினிமாக்களிலும் அரைகுறை ஆடையில் தமிழக மக்களுக்கு நாட்டிய விருந்து படைத்த ஒரே தகுதியினூடாக அ.தி.முக தலைமை பதவியை வகிக்கும் செல்வி(?!) ஜெ.ஜெயலலிதா அவர்கள், தி.மு.க தலைவர் கருணாநிதியின் மகளுக்கு மாநிலங்களவை உறுப்பினர் வழங்கப்பட்டது எந்த தகுதியின் அடிப்படையில் என கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதிலளிக்கும் போது திமுக மகளிரணி பிரமுகரான கவிஞர் விஜயா தாயன்பன் கீழ்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
“முதல்வர் கருணாநிதி, தமிழகத்திற்கும், தமிழ் மொழிக்கும், திராவிட இயக்கத்திற்கும் செய்த தியாகமும், உழைப்பும் அளவிட முடியாதது.
அதனால் முதல்வர் கருணாநிதியின் மகள் என்ற தகுதி மட்டும் கனிமொழிக்கு போதுமானது என்றாலும், அவர் நன்கு படித்தவர், நல்ல கவிஞர். ஆங்கிலத்தில் புலமை வாய்ந்தவர். மாநிலங்களவை உறுப்பினராவதற்கான அனைத்து தகுதியும் அவரிடம் இருக்கிறது”
ஆகவே ஆங்கில புலமை வாய்ந்தவர்கள் உடனடியாக தமிழுக்காகவும், தமிழின வளர்ச்சிக்காகவும் தனது வாழ்நாளையே செலவழித்துக் கொண்டிருக்கும் கலைஞரிடம் உடனடியாக மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக விண்ணப்பிக்கலாம்.
அப்பாடா, அப்படியாவது பாராளுமன்றம் கிரிமினல்களிடமிருந்தும், நாட்டிய, ஆபாச பரதேசிகளிடமிருந்தும், ரவுடிகளிடமிருந்தும் விடுதலை அடைகின்றதா எனப்பார்ப்போம்.