மதமாம், ஜெபமாம், விபச்சாரமாம்!

கம்ப்யூட்டர் மயமான இந்த இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் ஒரு விசித்திர சம்பவம் நடந்துள்ளது.

கோவை, பாப்பநாயக்கன்பாளையம், அன்னை இந்திரா நகரில், சொகுசு பங்களாவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார் மதபோதகர் சார்லஸ். திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியைச் சேர்ந்த இவர், மின்சாரத்துறையில் உதவிப் பொறியாளராகப் பணிக்குச் சேர்ந்தார். பிறகு குறி, ஜெபம் என்று தன்னை மதபோதகராகக் காட்டிக் கொண்டதில் கையில் காசு புரண்டது. எனவே அரசுப் பணியை உதறினார்.

சார்லஸின் பேச்சில் மயங்கிய பலரும் அவரோடு ஊழியத்தில் (ஜெபத்தில்) இணைந்துகொள்ள, கார் பங்களா என தனது வசதிகளைப் பெருக்கிக்கொண்டார். எப்போதும் தனது காரில் குட்டி, புட்டிகளுடன் வலம் வந்தார்.

fraud.jpg

இந்நிலையில்தான் கடந்த புதனன்று, சார்லஸின் சகோதரர் செல்வக்குமாரின் மனைவி அனுராதா, கோவை ரேஸ் கோர்ஸ் போலீஸில் பரபரப்பு புகார் ஒன்றைக் கொடுத்தார்.
அன்று இரவே அதிரடியாக சார்லஸின் வீட்டுக்குள் நுழைந்து மாடியில் இருந்த பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த போலீஸôர் அதிர்ச்சியில் நிலை குலைந்து போயினர். அங்கே அறை முழுவதும் புழுக்கள் நெளிய, சிதைந்த எலும்புக் கூடாக ஒரு ஆண் சடலம். அது தனது கணவர் செல்வக்குமார்தான் என அனுராதா அடையாளம் காட்ட பரபரப்பு மேலும் கூடியது.

“என்ன நடந்தது?’ என்பதை செல்வக்குமாரின் மனைவி அனுராதாவே நம்மிடம் விவரித்தார்.

“இனி என்னத்த சொல்றது? அண்ணனைப் பார்த்துட்டு வர்றேன்னு போன ஏப்ரல் 2-ஆம் தேதி எங்களை விட்டு வந்தவரு, இப்ப என்னையும் எனது குழந்தைகளையும் அநாதையாக்கிட்டு போய்ட்டாரே” எனக் கதறியவரை நாம் சமாதானப்படுத்திப் பேச வைத்தோம்.

“என் புருஷன் கொஞ்சம் பயந்த சுபாவம். மூனு மாசத்துக்கு முன்னாடி நைட்டு எதையோ பார்த்துட்டு பயந்தவர், வீட்டில் யாருகிட்டேயும் எதுவும் பேசாமல் இருந்தார். அப்பதான், அண்ணனை போய் பார்த்தா சரியாகிடும்னு எங்ககிட்ட சொல்லிட்டு கோயம்புத்தூர் வந்துட்டாரு. அவுங்க அண்ணன் சார்லஸ் ஊழியத்தில் இருக்கிறதால் குணப்படுத்தி விடுவார்னு நம்பிக்கையில அவரை அனுப்பி வச்சோம்.

ஆனா மூனு மாசமாக என் புருஷனை பத்தி எந்தத் தகவலும் இல்லை. அவுங்க அண்ணன் சார்லஸுக்கு ஃபோன் பண்ணி என் கணவரைப் பத்திக் கேட்டா, வெளியூர் போயிருக்கான், ஒரு ஊழியத்துல இருக்கான்னு சொல்லியே எங்களை சமாளிச்சுட்டு வந்தாரு.

இதனால எங்களுக்கு சந்தேகம் வந்து, போன புதன்கிழமை உறவினர்களோடு கோவை வந்தேன். சார்லஸ் வீட்டுக்கு போனப்ப வீடு பூட்டிக் கிடந்தது. கீழ் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் வின்சென்ட், அக்கம் பக்கத்துல கேட்டப்ப யாரும் எந்த பதிலும் சொல்லலை. அப்ப நான் மாடிக்கு போனேன்.

அங்கே ஒரு விதமான வாடை வீசியது. சந்தேகமடைந்து போலீஸுக்குச் சொன்னோம். அவுங்களும் வந்து கதவை உடைச்சு பார்த்தப்போ சார்லஸ் தனது மனைவி, குழந்தைகளுடன் கட்டில் அருகில் அமர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தார். எனது கணவர் செல்வக்குமார் கட்டிலில் உடல் அழுகி இறந்து கிடந்தார். பாவிப்பய ஊழியம் செய்யுறேன்னு சொல்லி என் புருஷனை கொன்னுட்டான்” எனக் கதறினார் அனுராதா.

இதையடுத்து அருகிலிருந்த செல்வக்குமாரின் மைத்துனர் சாமுவேல் துரைராஜ் நம்மிடம், “ஊழியம் பண்றேன், ஜெபம் பண்றேன்னு சொல்லிட்டு மக்களை ஏமாற்றி காசு வாங்குறதுதான் சார்லஸ்சோட வேலையே…! குடும்பப் பிரச்சினைன்னு சொல்லி யாராவது இவன்கிட்ட வந்தாங்கன்னா குடும்பத்தை நிரந்தரமா பிரிப்பதோடு, பொம்பளைகளை தன் பக்கம் சேர்த்துக்குவான். அப்புறம் அவுங்களை தன்னோட “ஊழியத்துக்கு’ பயன்படுத்திக்குவான். எப்பவுமே சார்லஸோட ஐந்து, ஆறு பொண்ணுங்க இருப்பாங்க.

அவுங்களை எங்க எங்கேயோ கூட்டிட்டுப் போவான். ஜெபம் என்ற பெயர்ல இவன் விபச்சாரத் தொழில் செய்றானோன்னு சந்தேகம் எங்களுக்கு இருக்கு. ஏன்னா இவனோட கௌரி, இந்திரான்னு ரெண்டு பொம்பளைங்க எப்பவும் கூடவே இருப்பாங்க. இவங்களோட மோசமான தொழில் பற்றி அந்த ஏரியாவுக்கே தெரியும். இவங்களை புடிச்சு போலீஸ் விசாரிச்சா எல்லா உண்மையும் தெரிஞ்சிடும்…
போலீஸ் சொல்ற மாதிரி இவன் சைக்கோவெல்லாம் கிடையாது. கிரிமினல்… மச்சான் தூக்குப்போட்டு தற்கொலை செய்யுற அளவுக்கு கோழை அல்ல, அவரை கொலை பண்ணியிருப்பாங்களோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு… இந்த சார்லஸ் பத்தின முழு விவரத்தையும் போலீஸ் விசாரிக்கணும். அப்பதான் உண்மை தெரியும்” என்றார்.

இதற்கிடையே போலீஸ் பிடியில் இருந்த மதபோதகர் சார்லஸ் தனது வாக்கு மூலத்தில், “ஏப்ரல் 6-ஆம் தேதி பிரார்த்தனைக்காக நான் வெளியூர் போய்ட்டேன். அப்ப வீட்டில் தனியா இருந்த என் தம்பி செல்வக்குமார் மனபயத்தால் மின் விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தை என் மனைவி எனக்குச் சொன்னார். இயேசுவின் ஆணையின் பேரில் அவர் மீண்டும் உயிர்த் தெழுவார் என்ற நம்பிக்கையில் இறந்த எனது தம்பியை மீண்டும் உயிர்ப்பிக்க ஜெபம் செய்தோம். 90 நாட்களில் தம்பியை உயிர்ப்பித்து இருப்பேன். உடல் அசைந்து தம்பி உயிர்த் தெழுவதற்கான காலகட்டம் வந்த நிலையில்தான் போலீஸாரும், தம்பி குடும்பத்தினரும் கெடுத்து விட்டனர். தம்பியின் ஆவியுடன் பேசியதில் அவனது கை, கால்களில் அசைவு தெரியத் துவங்கியது. அதற்குள் அவனை உயிர்ப்பிக்க முடியாமல் சாகடித்துவிட்டனர்” என கேஷுவலாக சொல்ல போலீஸாரே அதிர்ச்சியடைந்துவிட்டனர்.

இந்நிலையில் அறுபது நாட்களாக பிண வாடை அக்கம் பக்கம் தெரியாமல் இருக்க, கெமிக்கல்களையும், அறையில் காற்று புகாத வண்ணம் அடைப்புகளையும் ஏற்படுத்தி யாருக்கும் சந்தேகம் வராமல் செய்திருக்கிறார் சார்லஸ். தற்போது சுகாதார சீர்கேடு விளைவித்தல், இறப்பு பற்றி போலீஸுக்கு தகவல் கொடுக்காமல் மறைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் மத போதகர் சார்லஸ், அவரது மனைவி சாந்தி, வின்சென்ட், அவரது மனைவி ஜெயசீலி, உறவினர் ஜான்சன் ஆகிய ஐந்து பேரையும் கைது செய்துள்ள போலீஸ் இவர்களின் பின்னணி பற்றியும் தீவிரமாக விசாரித்து வருகிறது.

படித்தது

செய்திகள், தமிழகம் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: