கொடுமை – கின்னஸ் படுத்தும்பாடு!

 பணபைத்தியங்களைகேள்விப்பட்டிருப்பீர்கள். இதுபுகழ்பைத்தியங்களைக்குறித்தது.

கீழேகாணும் படத்தை பாருங்கள் – வெறும் 15 மாதமே ஆன பச்சிளங் குழந்தையை தண்ணீரில் போட்டு கொடுமைப்படுத்துவதை.

ginnus.jpg
சென்னை, திருவல்லிக்கேணி வி.ஆர்.பிள்ளை தெருவை சேர்ந்த தம்பதி கமலாகர், விஜயலட்சுமி. இவர்களது மகன் மஹாரந்த் கமலாகர். பிறந்து 15 மாதங்களே ஆன இந்த பச்சிளங் குழந்தையை கின்னஸில் இடம் பிடிக்க வைக்க வேண்டும் என்பதற்காக விஜயலட்சமியின் தம்பி அருண் பாலாஜியிடம் நீச்சல் பயிற்சி எடுக்க வைத்து வருகின்றனர்.

சென்னை காஸ்மோபாலிடன் கிளப்பில் நேற்று மாலை கின்னஸில் இடம் பிடிப்பதற்காக இப்பச்சிளங் குழந்தையை வைத்து பாலாஜி முயற்சி மேற்கொண்டார். இந்த கொடுமையை பார்க்க பலர் அங்குள்ள நீச்சல் குளத்தின் முன் கூடியிருக்கின்றனர். குழந்தை மஹாரந்த் நான்கு மீட்டர் தூரம் மூச்சடைத்து நீந்தியதைப் பார்த்து கூடியிருந்தவர் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

குழந்தையின் தாயார், “ஆஸ்திரேலியாவில் இரண்டரை வயது குழந்தை ஒன்று தண்ணீரில் கை, கால்களை அசைத்து மிதப்பதை பார்த்தோம். அப்போது எங்களுக்கு மஹாரந்த்தையும் குறைந்த வயதில் நீந்த வைக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அவனுக்கு ஒரு வயது ஆன போது நீச்சல் குளத்தில் தண்ணீரில் போட்டோம். அவன் அழவில்லை. நீச்சலடிப்பதில் அவனிடம் முன்னேற்றம் தெரிந்தது. இதையடுத்து அவனுக்கு பயிற்சியளித்து வருகிறோம். தினசரி ஒரு மணி நேரம் பயிற்சி மேற்கொள்வான். எனது மகன் சிறந்த நீச்சல் வீரனாகி, பல்வேறு நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு விருதுகள் பெற வேண்டும் என ஆசைப்படுகிறேன்.” என்று கூறினார்.

புகழ் மயக்கம் இப்படியா தாய்மையையும் பலி கொள்ளும்?

சிந்தனைகள், செய்திகள், தமிழகம் இல் பதிவிடப்பட்டது . 6 Comments »

6 பதில்கள் to “கொடுமை – கின்னஸ் படுத்தும்பாடு!”

  1. மாயன் Says:

    கோர்ட்டில் வழக்கு தொடுத்து அம்மா, அப்பா இருவரையும் சிறையில் அடைக்க வேண்டும்… சாதனை செய்வதற்கும் ஒரு வயது வரம்பு உள்ளது…
    முன்பு குற்றாலீஸ்வரன், இப்போது ஒரிசா சிறுவன் புடியா.. குழந்தைகளா எந்திரங்களா?

  2. அழகேசன் Says:

    பாம்பு, பல்லி, பாச்சான், எலி, பூரான் என உயிர்வதைகளுக்கு எதிராக ஓடும் நீலக்குயில் அமைப்புகளின் பார்வையில் இதெல்லாம் மிகுந்த மனித்தன்மையான செயல்கள் போலிருக்கின்றது.

    எங்கேயாவது யாராவது நடக்கும் இடத்தில் எறும்புகளை மிதிக்கின்றார்களா என சல்லடையிட்டுக் கொண்டிருக்கின்றார்களோ என்னமோ?

  3. Ramesh Says:

    you are right. I also shocked when I saw this News. They have to be punished severely. I think this the time to start a new organizations to save the children.

  4. Dubaivaasi Says:

    The child is not abused. It is given training to swim properly and it does without much strain. Don’t equate this to some other things happening around the world.

    Of course, this is purely an advt. I know a lot of such kids who have learnt swimming at this age group. It is not an ABUSE at all.

    Cos of denying such early age introduction to sports to our children, we don’t get even a single medal in Olympics. See things positively. This child can become a gold medalist in swimming if guided properly.

  5. Kumar Says:

    It is definitely an abuse. Does the child swim with his own interest and will? All these things are due to their parents madness towards attracting media

  6. அழகேசன் Says:

    வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி குமார், துபாய்வாசி மற்றும் ரமேஷ் அவர்களே


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: