குவாண்டனமோ வன்கொடுமைசாலையை எவ்வளவு வேகமாக இழுத்து மூட முடியுமோ அவ்வளவு வேகத்தில் இழுத்து மூட தயாராக வேண்டும் என அமெரிக்க முன்னாள் செயலாளர் காலின் பவல் கோரிக்கை விடுத்தார்.
குவாண்டனமோ சிறைச்சாலை அமெரிக்காவிற்கு மிகப்பெரிய பாதகம் என்றும், சர்வதேச அளவில் அது தேசத்தின் பெருமைக்கு களங்கம் விளைவிக்கின்றது என்றும் பவல் கூறினார். குவாண்டனமோ சிறைச்சாலையை உடனடியாக மூடி விட்டு அங்கு கொடுமைப்படுத்தப்படும் 380 க்கும் மேற்பட்ட சிறைவாசிகளை அமெரிக்க ஃபெடரல் சட்டத்தின்படி விசாரணை செய்ய வேண்டும் எனவும் குவாண்டனமோ எதிர்பார்த்ததைப் போன்றல்லாமல் அமெரிக்காவிற்கு நன்மையை விட தீமைகளையே அதிகம் விளைவிக்கின்றது என்று அவர் கூறினார்.