யாரப்பா அந்த புதிய வரவு என்று கலங்க வேண்டாம். எல்லாம் நம்ம நாட்டாமை அய்யாதான். நாட்டாமை அண்ணாச்சி என்ன சொல்றாருன்னு பார்ப்போமா?:
“விரைவில் நான் தொடங்க உள்ள புதிய கட்சியின் கொள்கைகளை வகுக்க ஓய்வு பெற்ற 30 ஐஏஎஸ் அதிகாரிகளைக் கொண்ட குழுவை அமைத்துள்ளேன்.
நாட்டின் பொருளாதாரம், தொழில், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்காக தொலைநோக்குடன் கூடிய கொள்கைகள் வகுக்கப்படும்.
எனினும், மக்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே கட்சியின் முதலாவது கொள்கையாக இருக்கும்.
எனக்கோ அல்லது எனது சகாக்களுக்கோ தமிழகத்தின் முதல்வராக ஆசை இல்லை. ஆனால், நீங்களும் (மக்களும்) முதல்வராக வரலாம் என்று உணரச் செய்ய பாடுபடுவேன்.
தேர்தலின்போது சராசரியாக 55 சதவீதம் பேர் மட்டுமே வாக்களிக்கின்றனர். இதில் 28 சதவீதம் வாக்குகளை பெறுபவர்களே ஆட்சிப் பொறுப்புக்கு வருகின்றனர்.
எனவே, மீதியுள்ள வாக்காளர்களையும் வாக்களிக்கச் செய்வதன் மூலம் உண்மையான ஜனநாயகத்தை மலரச் செய்ய முடியும்.
காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட எந்தக் கட்சியை மக்கள் விரும்புகிறார்களோ அந்தக் கட்சிக்கு தங்களது வாக்குரிமையை முழுமையாக பயன்படுத்துவது அவசியம்.
அரசியல் தலைவர்கள் தற்போது கொச்சையாக விமர்சனம் செய்கின்றனர். யார் குடிகாரர் என்று தினமும் வாக்குவாதம் நடப்பது வேதனை அளிக்கிறது.
இளைஞர்கள் நல்லொழுக்கத்தை பின்பற்றினால் பல ஆண்டுகள் இளமையுடன் வாழலாம். எம்.ஜி.ஆர். தனது 65 வயதில் கூட துள்ளிக் குதித்து ஓடியதை நான் பார்த்து வியந்துள்ளேன்.
25 ஆண்டுகள் திரைப்படத் துறையில் தொடர்புள்ள நான் அரசியலுக்கு வர எம்ஜிஆர் தான் காரணம். எம்.ஜி.ஆர். தான் எனக்கு முன்மாதிரி.
“நாட்டாமை” போல யாருக்கும் பஞ்சாயத்து செய்ய மாணவர்கள் நினைக்க வேண்டாம்.
மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை தீர்க்க பாடுபடுவேன். அதற்காகவே அரசியலுக்கு வந்துள்ளேன். ஆனால், ஒரு நாள் முதல்வராக இருந்து ஒன்றும் சாதிக்க முடியாது.
2 கட்சிகள் உள்ள ஜனநாயக முறை நமக்குப் பொருந்துமா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.”
நம்ம அண்ணாச்சியின் அறிக்கையினைகண்டு புல்லரித்துப் போய் இருப்பவர்களுக்கு -பொறுங்கள். ஏழரை அண்ணாச்சிக்கா அல்லது தமிழக அப்பாவிஜனங்களுக்கா என்பதை பொறுத்தி்ருந்து பார்ப்போம்.
3:38 பிப இல் ஜூன் 11, 2007
என்னைக் கேட்டா ,நாட்டாமை,கேப்டன்,மரம்வெட்டி,திருமா ஒரு மூன்றாவது அணியை உருவாக்க முயற்சி செய்யலாம்.
3:52 பிப இல் ஜூன் 11, 2007
ஆலோசனை நன்றாகத் தான் உள்ளது சிதம்பரம் அவர்களே.
ஆனால் இந்த கூட்டணியை தலைமையேற்று வழி நடத்துவது யார்?
எல்லாரையும் விட எனக்கு தெரிந்தவரையில் நாட்டாமைக்கு தகுதி இருந்தாலும், அவரின் முந்தைய தாவல்கள் இடிக்கிறதே.
7:00 முப இல் ஜூன் 12, 2007
Who is going to be the Ko.Pa.Cha
Heera
Nagma
Radhika
If i missed some one in the elite list ..please forgive me