சிதம்பரத்திலுள்ள புதுச்சத்திரம் அருகே பெரியபட்டு கிறிஸ்துவ தேவாலயத்தில் அந்தோனியார் சிலையின் தலையிலிருந்து ரத்தம் வழிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அடுத்த பெரியபட்டு கிராமத்தில் பல நூற்றாண்டுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட தேவாலயம் ஒன்று உள்ளது. இதில் ஆரோக்கியதாஸ் என்பவர் பங்கு தந்தையாக உள்ளார். இவர் ஆலய வளாகத்தில் உள்ள வீட்டில் தங்கி இருக்கிறார். இந்த ஆலயத்தில் புதுச்சத்திரம், பெரியபட்டு உள்ளிட்ட பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து கிறிஸ்துவர்கள் வழிபாட்டுக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 1 மணியளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பங்குதந்தை ஆரோக்கியதாஸ் சத்தம் போட்டு கத்தினார். உடன் ஆலய வளாகத்தின் வெளியில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் சென்று பார்த்த போது ஆரோக்கியதாஸ் மயங்கிய நிலையில் கிடந்தார். அவர் மயக்கம் தெளிந்து பேசும்போது, “ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்துள்ளது. எனது தலையில் பலத்த அடிபட்டது போல் உணர்ந்தேன். நான் மயங்கி விழுந்ததும் ஒன்றும் புரியவில்லை. நீங்கள் உடனடியாக ஆலயத்தின் உள்ளே சென்று பாருங்கள்” என்று கூறினார்.
உடன் அங்கிருந்தவர்கள் ஆலயத்தை திறந்து சென்று பார்த்த போது அங்குள்ள அந்தோனியார் சிலையின் தலை பகுதியில் இருந்து ரத்தம் வடிந்து கொண்டிருந்ததை கண்டு திடுக்கிட்டனர். காட்டுத்தீ போல் பரவிய இச்செய்தி அறிந்து அப்பகுதி பொது மக்கள் நேற்று காலை முதல் ஆலயத்திற்கு வந்து அந்தோணியார் சிலையின் தலையிலிருந்து வடியும் இரத்தத்தை ஆச்சரியத்தோடு பார்த்துச் செல்கின்றனர்.
6:25 முப இல் ஜூன் 10, 2007
உடனடியாக பிளட் குரூப் செக்கப் பண்ணச் சொல்லுங்க, ஏகப்பட்ட இரத்தம் வெளியாகி இருந்தால் இரத்தம் வழங்க எவரையாவது ஏற்பாடு பண்ணலாம்.
:)))))))))
7:41 முப இல் ஜூன் 10, 2007
Apdi Podu Raasa
8:38 முப இல் ஜூன் 10, 2007
அது எப்படி, இந்தியாவில் மட்ட்டும் பிள்ளையார் பால் குடிக்கிறார், அந்தோணியார் தலையில் இரத்தம்