தமிழர்களை பலவந்தமாக வெளியேற்றுவதற்கு எதிராக நீதிமன்றம்!

கொழும்பு: இலங்கை தலைநகரான கொழும்புவில் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு துவக்கிய இன சுத்தீகரிப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என இலங்கை உச்சநீதி மன்றம் கட்டளை பிறப்பித்தது.  தலைநகரில் வசித்து வந்த தமிழர்களை இலங்கை காவல்துறை கைதுசெய்து இலங்கையின் வடக்கு பகுதிகளுக்கு மாற்றிய நடவடிக்கைக்கு எதிராக செண்டர் ஃபார் பாலிஸி ஆல்டர்நேட்டீவ்ஸ்(Center for Policy Alternatives) என்ற அமைப்பு தாக்கல் செய்த வழக்கில் உச்சநீதி மன்றம் இத்தீர்ப்பை வழங்கியது.

ஜூன் 22 ஆம் தேதி இவ்வழக்கு தொடர்பாக வாதம் கேட்பது வரை காவல்துறை அதிகாரிகள் தமிழர்களுக்கு எதிரான இந்நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்தது.

கொழும்புவில் ஹோட்டல்களிலும் மற்ற இடங்களிலும் தங்கியிருந்த 400 க்கும் மேற்பட்ட தமிழர்களை கடந்த தினம், நகரத்தில் விடுதலைப் புலிகளின் ஊடுருவலை தடைகின்றோம் என்ற பெயரில் வெளியேற்றப்பட்டனர். இவர்களை பத்திக்கலோவா, வவுனியா போன்ற இடங்களுக்கு காவல்துரை அனுப்பியது.

இவ்வெளியேற்றத்தை இன சுத்தீகரிப்பு எனக் கூறி இதற்கு எதிராக ஃப்ரீ மீடியா மூவ்மெண்ட்(Free Media Movement) என்ற மனித உரிமை கழகமும் போராட்டத்தில் குதித்திருந்தது.

இலங்கையின் தலைநகரிலிருந்து விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கின்றோம் என்ற பெயரில் தமிழர்களை வடக்குப் பகுதிக்கு நாடுகடத்திய இலங்கை காவல்துறையின் செயல்பாடு, அவர்களே தனி தமிழீழத்தை அங்கீகரித்ததற்கு ஒப்பாகும் என இதற்கு இதற்கு எதிராக தே.மு.தி.க தலைவர் நடிகர் விஜயகாந்த் அவர்களும் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இலங்கை, செய்திகள் இல் பதிவிடப்பட்டது . 3 Comments »

3 பதில்கள் to “தமிழர்களை பலவந்தமாக வெளியேற்றுவதற்கு எதிராக நீதிமன்றம்!”

  1. Kulakkodan Says:

    தமிழ் அமைப்புக்கள் கொழும்பில் இருந்து தமிழர்களை விரட்டுவதை அவசரப்பட்டு நிறுத்தியது மிகப் பெரிய முட்டாள்தனம். தொடர்ந்து வெளியேற்றி இருந்தால் இலங்கை அரசு உலக நாடுகளின் கடும்கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கும்.

    அமெரிக்காவைத் தொடர்ந்து பல நாடுகள் கண்டித்திருக்கும் வாய்ப்பு தவறிவிட்டது. முக்கியமாக இந்தியா, ஐரோப்பிய ஒண்றியம் வாய் திறக்க முன்னர் தமிழர்கள் நீதிமன்றம் சென்றுவிட்டார்கள். சிங்கள நீதீ மன்றம் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தன்னை ஒரு நேர்மையானவர்களாக காட்டிக் கொண்டதுடன், இலங்கை அரசையும் சர்வதேச கண்டனத்தில் இருந்து காப்பாற்றிக்கொண்டது.

    இலங்கை நீதிமன்றம் என்பது இனப்பாரபட்சமற்ற நீதி தேவதையின் ஆலயம்
    என்ற ஒரு பொய்த்தோற்றத்தை உருவாக்க வழக்குத் தொடுத்த தமிழர்களே காரணமாகிவிட்டார்கள்.

  2. அழகேசன் Says:

    வித்தியாசமான சரியானப்பார்வை.

    தொடர்ந்து அனைத்து தமிழர்களையும் வடக்கு முனைக்கு வெளியேற்றி சிற்சில பிரச்சனைகளில் மனஸ்தாபம் இருக்கும் தமிழர்களுக்கிடையே இறுக்கமான ஒற்றுமையை ஏற்படுத்த இலங்கை அரசே காரணமாக அமைந்திருக்கும்.

    எனக்கென்னமோ உலக நாடுகளின் அனுதாபத்தை வாங்குவதற்காகவும், அதன் மூலம் சமீபத்தில் விடுதலைப்புலிகளின் ஆக்ரோஷமான தாக்குதலுக்கு ஈடுகொடுக்க இயலாமல் திண்டாடும் இலங்கைக்கு சர்வதேச உதவியைப் பெறுவதற்காகவும் இலங்கை அரசே திட்டமிட்டு நடத்திய நாடகமாகக் கூட இந்த வெளியேற்று, தடை உத்தரவு நாடகம் இருக்கலாம் எனத் தோன்றுகிறது.

  3. அழகேசன் Says:

    வித்தியாசமான கோணத்தில் சிந்தித்து கருத்தளித்த குலக்கோடன் அவர்களுக்கு நன்றி – வருகைக்கும்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: