திருநங்கைகளைக் குறித்து அறிந்து கொள்ளுங்கள்!

பெண்ணும் ஆணும் இயற்கையின் படைப்பு என்பதில் எந்த அளவு உண்மை இருக்கின்றதோ, அதைப் போலவே அலிகள் என்றழைக்கப்படும் அரவாணிகளையும் இயற்கைதான் படைத்திருக்கிறது என்பதில் உண்மை இருக்கின்றது. பெண்ணும் ஆணும் கடவுளின் படைப்பு என்று நம்பிக்கை சார்ந்த ஆன்மீகத் தளத்தில் நின்று பார்த்தாலும் கூட, அரவாணிகளும் கடவுளின் படைப்புதான் என்பதில் நம்பிக்கை கொண்டாக வேண்டும். ஆக, பெண் என்பது ஒரு பாலினம்; ஆண் என்பது இன்னொரு பாலினம், அரவாணி என்பது மூன்றாம் பாலினம் எனக் கொள்ளலாம். ஆனால், சமூகத்தில் நிலவுகிற எல்லாச் சட்டகங்களுமே (Fரம்ச்) மூன்றாம் பாலினத்தை அங்கீகரிப்பதில்லை. சமூகத்தின் பொதுத் தளங்கள் யாவும் அரவாணிகளை அருவருப்பான மனநிலை சார்ந்த மக்கள் பிரிவாகவே புரிந்து கொண்டிருக்கின்றன. இன்றைய வெகுமக்கள் ஊடகங்கள் யாவும் அரவாணிகளைக் கேவலமாகத்தான் காட்டி வருகின்றன. இத்தகைய ஊடகங்களால் உருவாக்கப்படும் கருத்தியலின் விளைவுகளால் சமூகமே இவர்களை இழிவான பிறவிகளாகப் பார்த்து வருகின்றது.

அரவாணிகள் குறித்து அறிந்து கொள்ள நிறைய இருக்கின்றன. அரவாணிகள் பற்றிய தரவுகளை அவர்களே முன்மொழிகிற போதுதான் அது முழுமை கொள்ள முடியும். அவர்களிடம் கேட்டுப்பெறுகிற அல்லது பழகிப் பகிர்ந்து கொள்கிற செய்திகள் முழுமையான தரவுகளாக அமைந்திடாது. ஆயினும், அரவாணிகளைக் குறித்த முதல்நிலைப் புரிதலுக்காக சில அரவாணித் தோழர்களிடம் பெற்றுக் கொண்ட வாய்மொழித் தரவுகளை வைத்துக் கொண்டு சில புள்ளிகளைத் தொட்டுக் காட்ட முயற்சிக்கிறது இக்கட்டுரை.

அரவாணி இல் பதிவிடப்பட்டது . 3 Comments »

3 பதில்கள் to “திருநங்கைகளைக் குறித்து அறிந்து கொள்ளுங்கள்!”

  1. லிவிங் ஸ்மைல் Says:

    தங்களின் திருநங்கைகள் (அரவானிகள்) மீதான தங்களின் கரிசனத்திற்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி..

    திருநங்கைகள் குறித்த எனது வலைத்தளம் இது

    livingsmile.blogspot.com

    மேற்படி தாங்கள் இணைப்பு தந்துள்ள கட்டுரையின் தகவலாளியும் நானே

  2. அழகேசன் Says:

    வருகைக்கு நன்றி லிவிங் ஸ்மைல் அவர்களே.

    தங்களின் கட்டுரை என அறியாமலே இதனை பதிந்தேன். அறியத்தந்தமைக்கு நன்றி.

    திருநங்கைகள் நல்ல சொல். இனி இச்சொல்லையே கையாள முயல்கின்றேன்.

    எனக்கு ஒரு சந்தேகம்:

    திருநங்கைகள் என்ற சொல் நேரடியாக பெண்பாலை அல்லவா குறிக்கின்றது. எனில் திருநங்கைகள் பெண்களா?

    உங்களை வருத்தப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் கேட்கவில்லை. தவறு இருந்தால் மன்னிக்கவும். மனதில் தோன்றியதை கேட்டேன். அவ்வளவு தான்.

  3. Kadugu Says:

    திரு என்பது திருவாளர் என்பதன் சுருக்கமாக வழங்கப்படுகிறது. எனவே திரு.நங்கை (ஆண் + பெண்) என்பதனை திருநங்கை என அழைப்பது பொருத்தமாகவும், புண்படுத்தாதபடியும் இருக்கும்.
    http://www.kadugu.com –> படைப்புகள் வரவேற்கப்படுகின்றன‌


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: