செத்த நாக்குகளின் வெட்கமில்லா பேச்சுக்கள்!

அரசுப் பேருந்துகளில் காலத்தால் அழியாத திருக்குறள் இடம் பெற்றிருந்தது. தற்போது அவற்றை அழித்துவிட்டு தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி எழுதியவற்றையும், பேசியவற்றையும் பொன்மொழி என்ற பெயரால் எழுதி வருகிறார்கள். இதை எதிர்த்து அ.தி.மு.க. போராட்டம் நடத்தும்.  – ஜெ. ஜெயலலிதா

திருவள்ளுவர் பெயரில் ஓடிக்கொண்டிருந்த அரசு பேருந்துகளை ஜெ.ஜெ என்று பெயர்மாற்றம் செய்த இந்த முன்னாள் அரைகுறை ஆடை நாட்டியக்காரிக்கு இதைப்பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது?

அ.தி.மு.க.வில் இரண்டு பெண்கள் தான் சரியில்லை. பிற தலைவர்கள், தொண்டர்கள் நல்லவர்கள். தி.மு.க.வில் கருணாநிதி, அன்பழகன் ஆகியோர் மட்டுமே நல்லவர்கள்.-  பா.ம.க. நிறுவனர் டாக்டர். ராமதாஸ்.

பா.ம.கவில் எவருமே நல்லவர்கள் இல்லை. அடப்போங்கடா போக்கத்தவனுங்களா! – மக்கள்.

கழிவுகள் இல் பதிவிடப்பட்டது . 1 Comment »

வீர சவார்க்கர் எதில் வீரர்?

மூஞ்சே, ஹெட்கேவர், கோல்வால்கர் தொடங்கி நிறைய பேர் இருக்கும் போது, ‘ஆர்.எஸ்.எஸ். & கோ’வினரால் அதிகம் அடையாளம் காட்டப்படுவோர் வீரசிவாஜி, வீரசவார்க்கர், பாலகங்காதர திலக் ஆகியோரே. அதற்குக் காரணமும் இருக்கவே செய்கிறது. முடிசூடுவதற்காக பார்ப்பனர்களிடம் அடி பணிந்த சிவாஜியாக இருந்தாலும், காங்கிரஸ் மாநாட்டில் செருப்பை விட்டெறிந்து ரகளையில் ஈடுபட்ட ‘திலக்’காக இருந்தாலும், காந்தியார் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சவார்க்கராக இருந்தாலும் அவற்றை மறைத்து தேசியம் என்ற பொதுத் தலைப்பின்கீழ் இவர்களை அறிமுகப்படுத்தலாம் என்பதுதான் அது. இந்துத்வா என்னும் நஞ்சை புகட்டுவதற்காக சேர்க்கப்படும் தேசபக்தித் தேனாக இருக்கும் சவார்க்கருக்கு ஆபத்து என்றால், அவர்கள் தாண்டிக் குதிக்கத் தகுந்த காரணமில்லையா இது?

விநாயக் தாமோதர் சவார்க்கர், பார்ப்பனர்களிலேயே தூய பிரிவாகக் கருதப்படும் சித்பவன் பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்தவர். பார்-அட்-லா படிப்பதற்காக இங்கிலாந்துக்குப் போன சவார்க்கர், அங்கே “சுதந்திர இந்தியச் சங்கத்தில்” இணைந்த இந்திய மாணவர்கள் ஆயுதமேந்தக் காரணமாக இருந்ததாக இங்கிலாந்து அரசு கருதியது.

வங்காளத்தின் ‘குதிராம் போஸ்’க்கு எதிரான வழக்கில் வாதாடிய சர். கர்ஸன் என்பவரை 1909-ஆம் ஆண்டு சுட்டுக் கொன்றதாக ‘மதன்லால் திங்கரா’ என்ற சுதந்திர இந்தியச் சங்கத்தின் தீவிர உறுப்பினர் கைது செய்யப்பட்டார். அந்தக் கொலையில் வி.டி. சவார்க்கருக்கும் தொடர்பு இருந்ததாக 13.3.1910-ஆம் நாள் அவர் கைது செய்யப்பட்டார். இந்தியாவில் மேலும் விசாரணைக்காக சவார்க்கரை கப்பலில் இந்தியாவுக்குக் கொண்டு வந்தனர். வரும் வழியில் பிரான்சில் ‘மார்செய்லீஸ்’ என்ற துறைமுகத்தில் 8.7.1910-அன்று சிறுநீர் கழிக்கச் செல்வதாகக் கூறி தப்பித்துச் செல்ல முயன்று, உடனே பிடிபட்டார் சவார்க்கர். தண்டனையில் இருந்து தப்பும் எண்ணம் தொடக்கம் முதலே அவருக்கு இருந்து வந்தது. கைது செய்யப்படும் முன்பே பாரீசுக்கு தப்பிச் சென்று, அங்கு தொடர்ந்து இருக்க முடியாமல், எப்படியும் கைது செய்யப்படுவோம் என்று அறிந்து தொடர் வண்டியில் வந்து கொண்டிருக்கையில் விக்டோரியா ஸ்டேஷன் அருகில் பிடிபட்டார்.

அதே ஆண்டு டிசம்பர் 24-ஆம் நாள் 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டு அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார். அந்தமான் தீவுக்குக் கப்பலில் கொண்டு செல்லப்பட்டு 1911-ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் நாள் சிறையிலடைக்கப்பட்டார். சிறைக்குக் கொண்டு வரப்பட்டவுடன், 6 மாதம் கழித்து ஒரு கருணை மனு எழுதி பிரிட்டிஷ் அரசுக்கு அனுப்பி வைத்தார், கருணை மனு வீரரான சவார்க்கர். அது கண்டுகொள்ளப்படாமல் போகவே மீண்டும் அதை நினைவூட்டி 1913-ஆம் ஆண்டு நவம்பர் 13-இல் ‘புகழ்பெற்ற’ கருணை மனுவினை அனுப்பிவைத்தார்.

கருணை மனுப் போர் தொடுப்பதில் மட்டும், என்றும் சளைக்காத மன்னிப்புக் கடித மாவீரராகவே திகழ்ந்தார் அவர். அந்தமானில் அடைக்கப்பட்டபோதும் சரி, காந்தியார் படுகொலையில் சிறையில் இருந்தபோதும் சரி – அவர் எழுதிய கருணை மனுக்கள் மாதிரியாகக் கொள்ளப்பட வேண்டியவை. அதிலும், தடாலடியாகக் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பது போன்று எழுதுவது சவர்க்கரின் தனிச்சிறப்பு.

அந்தமானில் சவர்க்காரின் சிறை வாழ்க்கை நிறைய சுவாரசியமானது. அவருடன் சிறையிலிருந்த 92 வயதான தினேஷ் குப்தா என்பவர் ஆக. 9, 2003 அன்று டில்லியில் அளித்த ஒரு பேட்டியில்,

“வி.டி. சவர்க்காரும் நானும் ஒன்றாக சிறையில் இருந்தவர்கள். அவர் ஒன்றும் சிறையிலேயே உயிரைவிட்டு விடவில்லை. சிறையிலேயே உயிரைப் பறிகொடுத்த 8 விடுதலை தியாகிகளுக்கு அவர்களின் நினைவைப் போற்ற போர்ட்ப்ளேயரில் வைக்கப்பட்டிருக்கும் சிலைகளுக்கு மத்தியில் சவர்க்காரின் சிலையையும் வைத்திருப்பது அந்த மற்ற விடுதலை வீரர்களையும் அவமானப்படுத்துவதாகும். மேலும் ஆங்கிலேயர் ஆட்சிக்கு உதவுவதாகக் கூறி மன்னிப்புக் கடிதம் எழுதியனுப்பிய சவர்க்காரை விடுதலைப் போராட்டத் தியாகியாக சித்திரிப்பது மாபெரும் தவறாகும்; தாங்கமுடியாத துன்பமாகும்” என்று குறிப்பிட்டார்.

அவருடன் சிறையிலிருந்த விஸ்வநாத் மாத்தூர் என்பவர், “ஒரு கோழையைப் புரட்சியாளனாக தூக்கி நிறுத்துவது கேலிக் கூத்தாகும்” என்று கடந்த பி.ஜே.பி. ஆட்சியில் சவர்க்கார் படத்தை நாடாளுமன்றத்தில் வைத்தபோது தனது கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

தினேஷ் குப்தாவும், மாத்தூரும் மட்டுமல்ல, சவார்க்கருடன் சிறையில் இருந்த வங்காளத்தின் திரிலோகநாத் சக்ரவர்த்தி அவர்கள் தனது சுயசரிதை நூலில் தங்களை சிறை அதிகாரிகளுக்கு எதிராகப் போராடத்தூண்டி விட்டு, தான் மட்டும் (சவார்க்கர்) நல்ல பிள்ளையாக இருந்து உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளாமல் விட்டதைக் குறிப்பிட்டிருக்கிறார். இதை சவார்க்கரும் ‘அந்தமானில் எனது ஆண்டுகள்’ என்ற நூலில் ஒப்புக் கொண்டுள்ளதாக பிரபல வரலாற்றாளர் பிபின் சந்திரா கூறுகிறார்.

1911-ஆம் ஆண்டு சவார்க்கர் எழுதிய கருணை மனுவில் “1906-07 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் நிலவிய நம்பகத் தன்மையற்ற சூழலினால் நாங்கள் பாதை தவறிவிட நேரிட்டது. நாட்டின் நன்மையிலும், மனித நேயத்திலும் அக்கறை கொண்ட யாரும் தவறான பாதையில் செல்ல விரும்பமாட்டார்கள். எனவே பெருந்தன்மை வாய்ந்த அரசு என்னை மன்னித்து விடுதலை செய்தால் நான் விசுவாசமாக இருப்பதோடு, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் தவறான பாதை செல்வோரையும் என் வழிக்கு மாற்றுவேன்… எனவே பாதை தவறிய இந்த பிள்ளை பெற்றோரிடம் மன்னிப்புக் கோருவதில் தவறில்லை” என்று குறிப்பிடுகிறார்.

இப்படியாக, அந்தமானில் சவார்க்கரின் வீர, தீர, தியாகப் பெருவாழ்க்கை நிறைவுற்று 1921-ஆம் ஆண்டு மே 2-ஆம் நாள் அங்கிருந்து மாற்றப்பட்டு, 1921-24 ஆம் ஆண்டுகளில் வங்காளத்தின் அலிப்பூர் சிறையிலும், மகாராஷ்டிராவின் ரத்னகிரியிலும் சிறைவைக்கப்பட்டு, 1924-ஆம் ஆண்டு ஜனவரி 6-ஆம் நாள் இரு நிபந்தனைகளுடன் விடுதலையானார் சவார்க்கர்.

1. ரத்னகிரி மாவட்டத்தை விட்டு அனுமதியின்றி வெளியேறுவதில்லை.

2.நேரடி அரசியலில் பங்கேற்று பிரிட்டிஷ் அரசுக்கெதிராகப் போராடுவதில்லை என்பவை அந்த நிபந்தனைகள்.

சொன்னபடி செய்து பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாக ஆள் திரட்டும் பணியில் விடுதலையான பிறகு அவர் ஈடுபட்டார். அவரது தலைமையில், காந்தியார் கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியான நாராயண ஆப்தே மகாராஷ்டிரத்தில் இந்து மகாசபைக்கும், பிரிட்டிஷ் இராணுவத்திற்கும் ஆள் எடுக்கும் பணியில் ஈ டுபட்டு அதற்காக அரசாங்கத்திடமிருந்து உரிய ஊக்கத் தொகையையும் பெற்று வந்தார்.

இந்து மகா சபையையும், ஆர்.எஸ்.எசையும் கொண்டு, இந்துத்வாவைக் கட்டமைக்கப் பணியாற்றினார். சவார்க்கர் தன்னை ஒரு நாத்திகர் என்று குறிப்பிட்டுக் கொண்டாலும் கலாச்சார தேசியமாக இந்துத்துவத்தின் அடித்தளத்தில் இந்து அரசை நிறுவுவதே பணியாகக் கொண்டிருந்தார். 1924-ஆம் ஆண்டு விடுதலையான சவர்க்கார் 5 ஆண்டுகளுக்கு அரசியல் நடவடிக்கைகளில் ஈ டுபடுவதில்லை என்று தெளிவுபடுத்தியும், மேலும் அரசு அந்தக் காலக் கெடுவை நீட்டிப்பதாக இருந்தாலும், அரசின் முடிவுக்குக் கட்டுப்பட்டு நடக்கப் போவதாகும். 1925-ஆம் ஆண்டு ஒரு கடிதத்தை எழுதி காவல் துறையினருக்கு அனுப்பி வைத்தார்.

காந்தியார் கொலை வழக்கு செங்கோட்டையின் தனி விசாரணை அரங்கிற்குள் நடத்தப்பட்டபோது, அதில் வீர(!) சவார்க்கர் மட்டுமே தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லையென்றும், தன்னால் எந்தத் தீங்கும் நேரவில்லையென்றும் புலம்பியபடியே பேசியவர். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டபோது காவல் துறையினருக்கு அவர் எழுதிய கடிதத்திலும் அவ்வாறே குறிப்பிட்டிருந்தார் அது நிராகரிக்கப்பட்டது.

பரபரப்பான அந்த கொலை வழக்கில் நீதிபதி ஆத்மசரண் அவர்களால் “குற்றம் நிரூபணமாக போதிய ஆதாரம் இல்லை” என்று விடுவிக்கப் பட்டார் சவார்க்கர். காரணம் மேற்கூறிய திட்டத்தில் சவார்க்கரின் பெயர் இடம் பெறாதபடி நேரடி முக்கியக் குற்றவாளிகளான நாதுராம் கோட்சேவும், நாராயண ஆப்தேவும் அளித்த வாக்குமூலங்கள்.

நீதிமன்றத்திலோ சவார்க்கர் வெளியிட்ட கருத்து அவரது தீரத்தை (!) வெளிப்படுத்தியது. ‘கோட்சேயும், ஆப்தேயும் தங்களை பூனாவில் உள்ள மகாசபை வீரர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டதாகக் கூறினார். ஆனால், 1937-ஆம் ஆண்டு முதல் கோட்சேவுக்கும் சவார்க்கருக்கும் இருந்த தொடர்பு வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட ஒன்று. சவார்க்கரின் மேற்பார்வையில் கோட்சே நடத்திய இந்துராஷ்டிரா இதழும், கோபால் கோட்சேயின் வாக்கு மூலங்களும் தனஞ்செய்கீரின் (சவார்க்கரின் வாழ்க்கை வரலாற்று ஆசிரியர்) நூலுமே சாட்சி.

இந்த வழக்கு விசாரணையிலும் ஒரு கூத்து. வழக்கில் இருந்த மற்ற அனைவரி டமிருந்தும் தனித்துக் காணப்பட்டவராகவும், சோகமே வடிவான முகத்தைக் காட்டிக் கொண்டிருந்தவராகவும் சவார்க்கர் காணப்பட்டார். தூக்கு மேடை ஏறும் முன் கோட்சேயின் கடைசித் துயரமே, தனது குருஜி தன்னைக் கண்டு கொள்ளவில்லை என்பதுதான்.

எங்கும், எதிலும், எப்போதும் பட்டப்பெயரைத்தவிர வீரத்திற்கும், சவார்க்கருக்கும் நெருக்கம் இருந்ததே இல்லை.

நன்றி: உண்மை மாதமிருமுறை இதழ்

<a href = http://www.keetru.com/info_box/history/savarkaar.html>படித்தது </a>

ஆர்.எஸ்.எஸ், கோழை, பச்சோந்தி இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

வடமொழியை கொல்லும் தமிழ்சொற்கள்.

சாந்தம் – அடக்கம்
சாந்தி – அமைதி
சாரம் – சாறு; பிழிவு
சாராம்சம் – சாறு; பிழிவு
சாத்தியமான – இயலக்கூடிய
சாம்ராச்சியம் – பேரரசு
சிகரம் – உச்சி; முகடு
சிகை – தலைமயிர்
சிரம் – தலை
சிரசு – தலை
சிங்கம் – அரிமா
சிங்காரம் – ஒப்பனை; அழகு
சிசு – குழந்தை; சேய்
சித்தப்பிரமை – மனமயக்கம்
சிகிச்சை – மருத்துவம்
சித்தாந்தம் – கோட்பாடு
சிந்தனை – எண்ணம்
சிரமம் – கடுமை
சிலை – படிமம்
சிநேகம் – நட்பு
சிருங்காரம் – காமம்
சிதிலம் – சிதைவு
சீக்கிரமாக – சுருக்காக
சீதபேதி – வயிற்றுக்கடுப்பு
சீலம் – நல்லொழுக்கம்
சீ(ஜீ)ரணம் – செரிமானம்
சீ(ஜீ)வன் – உயிர்
சீ(ஜீ)வனம் – பிழைப்பு
சுகம் – நலம்
சுலபம் – எளிது
சுகவீனம் – நலக்குறைவு
சுகாதாரம் – நலவாழ்வு
சுத்தம் – தூய்மை
சுத்திகரிப்பு – துப்புரவு
சுதந்திரம் – விடுதலை; தன்னுரிமை
சுந்தரம் – எழில்
சுபம் – நன்மை
சுபீட்சம் – செழிப்பு
சுபாவம் – இயல்பு
சுய(நலம்) – தன்(னலம்)
சுயமாக – தானாக, சொந்தமாக
சுவாசம் – மூச்சு
சுரணை – உணர்ச்சி
சுயாதீனம் – தன்னுரிமை
சு(ஜு)வாலை – தீக்கொழுந்து
சுயேச்சை – தன்விருப்பம்
சூட்சுமம் – நுட்பம்
சூசகம் – மறைமுகம்
சூத்திரம் – நூற்பா
சூன்யம் – வெறுமை; பாழ்; இன்மை
சேட்டை – குறும்பு
சொகுசு – பகட்டு
சொப்பனம் – கனவு
சொற்பம் – சிறுமை; கொஞ்சம்
சோகம் – துயரம்
சோதனை – ஆய்வு
சோரம் – கள்ளம்
சவுக்யம் – நலம்
சவுபாக்யம் – நற்பேறு
ஞாபகம் – நினைவு
ஞானம் – அறிவு
தண்டனை – ஒறுத்தல்
தத்துவம் – மெய்யியல்; மெய்யுணர்வு; மெய்ப்பொருளியல்
தயவு (தயை) – இரக்கம்
தயாளம் – இரக்கம்
தந்தி – தொலைவரி
தயிலம் – எண்ணெய்
தரிசு – வறள்நிலம்; விடுநிலம்
தருணம் – வேளை
தனம் – செல்வம்
தரித்திரம் – வறுமை
தயாரிப்பு – விளைவாக்கம்
தகனம் – எரியூட்டல்
தய்ரியம் – துணிச்சல்
தானம் – கொடை
தாகம் – நீர்வேட்கை
தாசன் – அடியான்
தாட்சண்யம் – கண்ணோட்டம்; இரக்கம்
தாமதம் – காலநீட்சி; காலத்தாழ்ச்சி; நெடுநீர்
திடம் – திண்மை
திடகாத்திரம் – உடலுறுதி; உடற்கட்டு; கட்டுடல்
தியாகம் – ஈகம்
திரவம் – நீர்மம்
திரவியம் – செல்வம்
திராணி – தெம்பு; வலிமை

<a href = http://www.keetru.com/info_box/general/tamil.html&gt; கண்டெடுத்தது</a>

தகவல் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

கடவுள் இல்லையென்பவனும் இந்து தான்!

இந்து மதம் என்றால் என்ன? பொதுவாக நம் அனைவருக்கும் உடனே தோன்றும் பதில், அது வேதங்களின் அடிப்படையில் அமைந்த ஒரு மதம் என்பதே. இந்த விளக்கமானது, ஆபிரகாமிய மதங்கள் என்று நாம் இன்றழைக்கும் யூதகிறித்துவஇஸ்லாமிய மதங்களின் பார்வையை இரவல் பெற்று நாம் அமைத்துக்கொண்டது. நமக்கு அன்னியமான கோட்பாடு.

தொன்று தொட்டு வேதங்களுக்கு அப்பால் இருக்கும் மரபுகளும் நம்மிடையே சேர்ந்தே உள்ளன. வேதங்களை நிராகரிப்போர் இருந்திருக்கின்றனர். வேதங்களின் சாரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு சடங்குகளை நிராகரிப்போர் இருந்திருக்கின்றனர். கண்ணப்ப நாயனார் எந்த வேதத்தைப் படித்தவர்? இவரைத் தமிழ்ச் சைவத் திருக்கோவில்களில் எல்லாம் காணமுடியும். குரான் படிக்காத ஒருவரை இஸ்லாமியமகான் என்று யாராவது அழைக்கிறார்களா? பைபிளைப் படிக்காத ஒருவரைக் கிறித்துவ மகான் என்று யாராவது அழைக்கிறார்களா?

வேதங்களும் கொண்டவை இந்து மதம் என்றழைக்கலாமே ஒழிய, வேதத்தை அடிப்படையாக வைத்து எழும்பியவை மட்டுமே இந்து மதம்என்று சொல்ல முடியாது. வேதங்களைப் போன்றே வேத முடிவான உபநிஷத்துகள் முக்கியமானவை, அவற்றைப் போன்றே இணையான பாரம்பரியம் மிக்க ஆகமங்களும் முக்கியமானவையே; இது மட்டும் தான் வேதம், இது மட்டும் தான் ஆகமம் என்ற எல்லையும் இந்து மதத்தில் கிடையாது. எங்கும் நிறைந்த பிரபஞ்ச ஒலிகளைத் தியானத்தின் போது தரிசித்து உரைத்தனர் ரிஷிகள் என்பது வேதங்கள் பற்றி இந்து மதத்தில்நிலவும் பொதுவான நம்பிக்கை.

வேதங்கள் என்பவை வெறும் மந்திரங்கள், அவற்றிற்கு அர்த்தம் கிடையாது என்று சொல்லிய மகான்களும் இருந்திருக்கின்றனர். அதனாலேயே வேதத்துக்கு முதலும் முடிவும் கிடையாது என்று நம்புகிறோம். ஒலி என்பது பிரபஞ்ச உருவாக்கத்தின் முதலாகவும் முடிவாகவும் இருக்கவல்லதல்லவா? அதனால்தானோ என்னவோ இந்தக் கோட்பாடு.

சுருங்கக் கூறின், இந்து மதம் என்பது ஒரு வரையறைக்கு உட்படா மனிதக் கூட்டம். இதற்கு வேதம் தேவையில்லை, சடங்கு தேவையில்லை, நம்பிக்கை தேவையில்லை, ஏன் கடவுளே கூடத் தேவையில்லை.

<a href = http://tamil.sify.com/art/nesakumar/fullstory.php?id=14273578&page=2>படித்தது </a>

வகைப்படுத்தப்படாதது இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

நிலைநாட்டப்பட்ட மதமாற்ற உரிமை!

பிறப்பால் கிறித்துவராக இருப்பவர், இந்துவாக மாறினால் அவர் ஆதிதிராவிடர் சாதிச் சான்றிதழ் பெறவோ இடஒதுக்கீட்டுக்குரிய சலுகைகளை அனுபவிக்கவோ தகுதி இல்லை” (கடிதம் நகல் எண். 81 / 19.9.2000) என்றொரு ஆணையை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் கோலப்பன் மூலம், கடந்த முறை தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது வெளியிட்டிருந்தது.

இந்த ஆணையால் மதம் மாறும் உரிமை, தலித் மக்களுக்கு முற்றிலுமாக மறுக்கப்பட்டது. மதமாற்றத் தடைச் சட்டம் திரும்பப் பெற்ற பிறகும்கூட, இந்த ஆணை உயிர்ப்புடன் இருந்தது. இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான இந்த ஆணையை ரத்து செய்யக்கோரி, ஏப்ரல் 2002இல் வேலூர் ஊரிசு கல்லூரியின் பேராசிரியரும், “டாக்டர் அம்பேத்கர் மய்ய”த்தின் தலைவருமான அய். இளங்கோவன், உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தொடுத்தார். சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் “டிவிஷன் பெஞ்ச்” 4.10.2002 அன்று, இந்த ஆணைக்கான இடைக்காலத் தடையை வழங்கியது.

இந்த ஆணையை ரத்து செய்யக் கோரி, பல்வேறு கோரிக்கைகள் மூலம் பல வழிகளிலும் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. “தலித் முரசி”லும் இந்த ஆணை சட்டவிரோதமானது என்றும், இதை ரத்து செய்தால்தான் மதமாற்றத் தடைச் சட்டம் முழுமை பெறும் என்றும் தொடர்ந்து சுட்டிக்காட்டி, இவ்வாணையை திரும்பப் பெறக் கோரி இருந்தோம். இருப்பினும், தலித்துகளின் இக்கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவில்லை.

இந்நிலையில், பேராசிரியர் அய். இளங்கோவன் தொடுத்த வழக்கு, 13.4.2007 அன்று விசாரணைக்கு வந்தது. அவர் சார்பில் யசோத் வரதன் வாதாடினார். இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி முகோபாத்தியா மற்றும் நீதிபதி தனபாலன் ஆகியோர், அரசு செயலாளர் கோலப்பன் அனுப்பிய சுற்றறிக்கையை ரத்து செய்து தீர்ப்பு வழங்கினர். அரசு செயலாளர் அனுப்பிய சுற்றறிக்கை, உச்ச நீதிமன்றம் சில முக்கிய வழக்குகளில் அளித்துள்ள தீர்ப்புகளுக்கு முரணாக உள்ளது. எனவே, அந்தத் தீர்ப்புகளின் அடிப்படையில் 2 மாதங்களில் புதிய சுற்றறிக்கையை வெளியிட வேண்டும். இச்சுற்றறிக்கை குழப்பமான முறையில் இருப்பதால், இதை ரத்து செய்வதாக நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த ஏழு ஆண்டுகளாக, தலித் மக்களுக்கு முற்றிலும் எதிரான ஓர் ஆணையை எதிர்த்துப் போராட, எந்த தலித் இயக்கமும் முன்வரவில்லை என்பதையும் சேர்த்தே வரலாறு பதிவாகும்.

தீண்டாமை கூட்டுச் சதி தகர்ந்தது!

தீண்டாமை பல நூற்றாண்டு காலமாக காலத்திற்கேற்றவாறு தன் வடிவங்களை மாற்றிக் கொண்டே வந்திருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் அரசதிகாரமும் அதற்கு துணை நின்றிருக்கிறது. இன்றளவிலும் நம் கண்ணெதிரில் இந்தக் கூட்டு அரங்கேறிக் கொண்டுதான் உள்ளது. இக்கூட்டுச் சதியை முறியடித்து, நியாயத்தை நிலை பெறச் செய்ய, அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓரிருவர் போராடிக் கொண்டுதான் உள்ளனர். அந்த வகையில், திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்குரைஞர் ஆர். கிருஷ்ணன் தொடர்ந்த வழக்கை குறிப்பிடலாம்.

திருநெல்வேலி மாவட்டத்தின் அருகில் உள்ள ஒரு சிற்றூர் சிவந்திப்பட்டி. சாதி இந்து தேவர்கள் அதிகம் குடியிருக்கும் அச்சிற்றூரிலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பு காமராஜ் நகர். திருநெல்வேலி சந்திப்பிலிருந்து வரும் நகரப் பேருந்து, 1996 வரையில் காமராஜ் நகர் வரை சென்று, அங்கிருந்து மீண்டும் நெல்லைக்கு சிவந்திப்பட்டி வழியாகச் சென்றது. 1996இல் நடந்த சாதிக் கலவரத்தை அடுத்து, அப்பேருந்து சிவந்திப்பட்டி காவல் நிலையத்தோடு நிறுத்தப்பட்டது.

சிவந்திப்பட்டி மக்களும், காமராஜ் நகர் மக்களும் சிவந்திப்பட்டி காவல் நிலையத்திற்கு வந்து பேருந்தில் ஏறினர். இந்த மாற்றத்திற்கு காவல் துறை கூறிய காரணம்தான் கொடுமையானது. “காமராஜ் நகரிலிருந்து பேருந்து கிளம்பினால், காமராஜ் நகரைச் சேர்ந்த தலித் மக்கள் பேருந்து இருக்கைகளை நிரப்பி விடுவார்கள்” என்றும், “அதனால் சிவந்திப்பட்டியைச் சேர்ந்த தேவர்களுக்கு உட்கார இடம் கிடைக்காது” என்றும், “அப்படி ஏற்பாடு செய்தால் சாதிக்கலவரம் ஏற்படும்” என்றும் காவல் துறையினர் கூறியுள்ளனர்.

இதனை எதிர்த்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் ஆர். கிருஷ் ணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இவர் சார்பாக டி. அரிபரந்தாமன் வாதாடினார். இவ்வழக்கினை 13.3.2007 அன்று விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி தர்மராவ் எலிப்பி மற்றும் நீதிபதி கே. சந்துரு ஆகியோர், ஒரே வரியில், பேருந்து முன் போலவே காமராஜ் நகர் வரை சென்று, அங்கிருந்தே கிளம்ப வேண்டும் எனத் தீர்ப்பளித்துள்ளனர். இதன் மூலம் சாதி இந்துக்கள் அரசு எந்திரம் ஆகியவற்றின் கூட்டுச் சதி முறியடிக்கப்பட்டுள்ளது.

படித்தது

தலித் விடுதலை இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

கறுப்புக் கயிறு கட்டுவது ஏன்?

மனு எழுதிய ஸ்மிருதியில் (தர்ம சாஸ்திரத்தில்) காணப்படும் சமத்துவம் இல்லாமை என்பது, கடந்த கால வரலாறு என்றும், இந்துவான ஒருவன் நிகழ்காலத்தில் நடந்து கொள்வதற்கும், மனு தர்மத்திற்கும் தொடர்பு இல்லை என்றும் வாதிடலாம். இப்படி வாதிடுவதைவிடப் பெரிய தவறு எதுவும் இல்லை என்று சொல்லுவேன். மனுவின் சட்டம் கடந்த காலத்தது அல்ல. நிகழ் காலத்தின் ஒரு கடந்த வரலாறு என்பதுடன் அது நிகழவில்லை. அது வாழ்ந்து கொண்டிருக்கும் பழைமை; நிகழ்காலப் பிரச்சினைக்கு எவ்வளவு முக்கியத்துவம் உண்டோ அவ்வளவு முக்கியத்துவம் கடந்தகால மனு நீதிக்கு உண்டு.

மனுவினால் விதிக்கப்பட்ட சமம் இல்லாத தன்மை, பிரிட்டிஷ் ஆட்சி ஏற்படுவதற்கு முன்பு இந்நாட்டின் சட்டமாக இருந்தது என்பது அந்நியர் பலர் அறியாத ஒன்றாக இருக்கலாம். சில எடுத்துக்காட்டுகள் நிலையைப் புரிந்து கொள்ள உதவும்.

பேஷ்வாக்களின் ஆட்சியில், அவர்களின் தலைநகரான பூனா (புனெ) நகருக்குள், பிற்பகல் 3 மணிக்குப் பின்பும், முற்பகல் 9 மணிக்கு முன்பும் தீண்டப்படாதவர்கள் நுழையக் கூடாது. ஏனென்றால் காலை 9 மணிக்கு முன்பும், பிற்பகல் 3 மணிக்குப் பின்பும் அவர்களின் நிழல் நீளமாக இருக்கும். அந்த நிழல் பார்ப்பனர் மீது பட்டால் அவர்கள் தீட்டாகிவிடுவார்கள்.

மகாராஷ்டிராவில் தீண்டப்படாதவர்கள், கழுத்தில் அல்லது மணிக்கட்டில் கறுப்புக் கயிறு கட்டிக் கொள்ள வேண்டும். அவர்களைப் பிறர் உடனடியாக அடையாளம் காண்பதற்காக அவ்வாறு விதிக்கப்பட்டது.

பம்பாய் மாநிலத்தில் பொற்கொல்லர்கள் (சோனார்கள்) வேட்டியைப் பஞ்சக்கச்சம் வைத்துக் கட்டக் கூடாது, “நமஸ்காரம்” எனும் மரியாதைச் சொல்லைக் கூறக் கூடாது. (குறிப்பு: இங்கு அண்ணல் அம்பேத்கர், பம்பாய் கோட்டையில் இருந்து செயல்பட்ட ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி அரசின் தீர்மானத்தையும், அந்தத் தீர்மானப்படி பொற்கொல்லர்கள் நடக்க வேண்டும் என அரசுச் செயலாளர், அந்த சாதித் தலைவர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தையும் தந்துள்ளார். தீர்மானம் 1779 ஜூலை 28 இல் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து கடிதம் 1779 ஆகஸ்டு 9 இல் எழுதப்பட்டது. பொற்கொல்லர்கள் நமஸ்காரம் எனச் சொல்லுவதால், தங்களுக்கு இந்து மதப்படி உள்ள உரிமை பாதிக்கப்படும் எனத் திரும்பத் திரும்பப் பார்ப்பனர்கள் புகார் கூறியதால், அப்படி ஒரு தீர்மானம் பம்பாய் மாநில அரசால் நிறைவேற்றப்பட்டது)

மராத்திய ஆட்சியில் பார்ப்பனர் அல்லாத மற்ற எவரேனும் வேத மந்திரம் ஓதினால் அவருடைய நாக்கு வெட்டப்படும். உண்மையிலேயே சோனார்கள் (பொற்கொல்லர்கள்) பலருடைய நாக்கு அவ்வாறு பேஷ்வாவின் கட்டளையால் வெட்டப்பட்டது. தீண்டப்படாதவன் மிக உயர்ந்த குத்தகை கொடுக்க வேண்டும்.

மனு வாழ்ந்தது, கிறித்துவுக்குச் சில காலத்திற்கு முந்தி அல்லது பிந்தி இருக்கலாம். ஆனால், இந்து அரசர்கள் ஆண்ட அண்மைக் காலம் வரை, சமத்துவம் அற்ற மனு நீதிதான் சட்டமாகும் – டாக்டர் அம்பேத்கர்.

படித்தது

மனு இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

சீனா – அமெரிக்காவின் அடுத்த இலக்கு?

சீனாவின் அதிகரித்து வரும் இராணுவ வல்லமை குறித்து அமெரிக்கா ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்க காங்கிரஸிற்கு சமர்ப்பிக்கப்பட்ட பென்டகனின் அறிக்கையில் சீனா இராணுவ தேவைகளுக்காக அதிகளவு செலவிடுவதாக குறிப்பிட்டுள்ளதுடன், அதிகளவு வெளிப்படை தன்மைகளை வேண்டுகோளையும் விடுத்துள்ளது.

சீனாவினால் முன்கூட்டிய தாக்குதலை மேற்கொள்ள முடியும் எனவும் அதனிடம் நீர் மூழ்கிகளும் ஆளில்லாமல் செயற்படும் விமானங்களும் நவீன ஏவுகணைகளும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா தனது எல்லைப் பகுதியை மையமாகக் கொண்ட முன் கூட்டிய தற்பாதுகாப்பு தாக்குதல் தந்திரோபாயத்தை முன்னெடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்வான் நீரிணையில் ஏற்படும் நெருக்கடியில் அமெரிக்கா தலையிடலாம் என்பதை அடிப்படையாக வைத்தே சீனா தனது இராணுவ திட்டமிடல்களை மேற்கொண்டுள்ளது.

சீனா ஜனவரியில் மேற்கொண்ட செய்மதி எதிர்ப்பு ஆயுத சோதனையினால் செய்மதிகளை கொண்டுள்ள சகல நாடுகளுக்கும் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களை போல் சீனாவின் இராணுவ செலவீனங்களும் இராணுவ நோக்கங்களிலும் இரகசியத்தன்மை காணப்படுவதாய் குறிப்பிட்டுள்ளது.

பென்டகனின் அறிக்கையில் அமெரிக்கா வரை செல்லக் கூடிய கண்டங்களுக்கு இடையிலான ஏவுகணையை சீனா கொண்டிருப்பது குறித்து கவலை வெளியிடப்பட்டுள்ளது.

சீனாவிடம் 8,000 கிலோ மீற்றர் செல்லக் கூடிய கண்டங்களுக்கு இடையிலான ஏவுகணைகளை கொண்ட நீர் மூழ்கிகள் உள்ளன. ஒவ்வொன்றும் 12 ஏவுகணைகளை கொண்டு செல்லக் கூடியன.

படித்தது

உலகம், செய்திகள் இல் பதிவிடப்பட்டது . 1 Comment »

திருநங்கைகளைக் குறித்து அறிந்து கொள்ளுங்கள்!

பெண்ணும் ஆணும் இயற்கையின் படைப்பு என்பதில் எந்த அளவு உண்மை இருக்கின்றதோ, அதைப் போலவே அலிகள் என்றழைக்கப்படும் அரவாணிகளையும் இயற்கைதான் படைத்திருக்கிறது என்பதில் உண்மை இருக்கின்றது. பெண்ணும் ஆணும் கடவுளின் படைப்பு என்று நம்பிக்கை சார்ந்த ஆன்மீகத் தளத்தில் நின்று பார்த்தாலும் கூட, அரவாணிகளும் கடவுளின் படைப்புதான் என்பதில் நம்பிக்கை கொண்டாக வேண்டும். ஆக, பெண் என்பது ஒரு பாலினம்; ஆண் என்பது இன்னொரு பாலினம், அரவாணி என்பது மூன்றாம் பாலினம் எனக் கொள்ளலாம். ஆனால், சமூகத்தில் நிலவுகிற எல்லாச் சட்டகங்களுமே (Fரம்ச்) மூன்றாம் பாலினத்தை அங்கீகரிப்பதில்லை. சமூகத்தின் பொதுத் தளங்கள் யாவும் அரவாணிகளை அருவருப்பான மனநிலை சார்ந்த மக்கள் பிரிவாகவே புரிந்து கொண்டிருக்கின்றன. இன்றைய வெகுமக்கள் ஊடகங்கள் யாவும் அரவாணிகளைக் கேவலமாகத்தான் காட்டி வருகின்றன. இத்தகைய ஊடகங்களால் உருவாக்கப்படும் கருத்தியலின் விளைவுகளால் சமூகமே இவர்களை இழிவான பிறவிகளாகப் பார்த்து வருகின்றது.

அரவாணிகள் குறித்து அறிந்து கொள்ள நிறைய இருக்கின்றன. அரவாணிகள் பற்றிய தரவுகளை அவர்களே முன்மொழிகிற போதுதான் அது முழுமை கொள்ள முடியும். அவர்களிடம் கேட்டுப்பெறுகிற அல்லது பழகிப் பகிர்ந்து கொள்கிற செய்திகள் முழுமையான தரவுகளாக அமைந்திடாது. ஆயினும், அரவாணிகளைக் குறித்த முதல்நிலைப் புரிதலுக்காக சில அரவாணித் தோழர்களிடம் பெற்றுக் கொண்ட வாய்மொழித் தரவுகளை வைத்துக் கொண்டு சில புள்ளிகளைத் தொட்டுக் காட்ட முயற்சிக்கிறது இக்கட்டுரை.

அரவாணி இல் பதிவிடப்பட்டது . 3 Comments »

டேட்டிங் பெயரில் செக்ஸ் வியாபாரம்-சீனா அதிரடி!

“டேட்டிங் வெப்சைட் என்ற பெயரில், செக்ஸ் வியாபாரம் நடந்து வருகிறது” என்று, 12 “டேட்டிங் வெப்சைட்’கள் மீது, சீனா நடவடிக்கை எடுத்துள்ளது. வெப்சைட்களை கண்காணிக்க, சீனாவில் ஒரு அமைப்பு உள்ளது. தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்த அமைப்பு, எல்லா வெப்சைட்களையும் அலசி, சிலவற்றை தடை செய்ய பரிந்துரை செய்கிறது. “டேட்டிங் வெப்சைட்’கள் எல்லாவற்றையும் அலசிய இந்த அமைப்பு, “12 வெப்சைட்களை தடை செய்ய வேண்டும்’ என்று பரிந்துரை செய்துள்ளது. “இந்த வெப்சைட்களில், டேட்டிங் தொடர்பான தகவல்களை விட, விபசாரத்துக்கு வழி வகுக்கும் தகவல்கள் தான் அதிகம் உள்ளன. உண்மையில், இவை விபசாரத்துக்கு துணை போகின்றன’ என்று கண்டித்துள்ளது. வெப்சைட்களில், பெண்களின் படங்களையும் போட்டு, “டேட்டிங்’ விவரங்களை கொடுத்துள்ளன. “நாங்கள் டேட்டிங் தொடர்பான விவரங்களை தான் தந்துள்ளோம். ஆனால், சீன அதிகாரிகள், அவற்றை, விபசாரம் தொடர்பான தகவல்கள் என்று தவறாக நினைக்கின்றனர்’ என்று, வெப்சைட்கள் தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டது. “ஆட்சேபனை தெரிவிக்கப்பட்ட தகவல்கள், படங்கள் எல்லாவற்றையும் அப்புறப்படுத்தி விட வேண்டும். அப்படி செய்தால் வெப்சைட்கள், சீனாவில் பார்க்க அனுமதிக்கப்படும்’ என்று குழு இறுதியாக எச்சரித்து, கெடு விதித்துள்ளது. இன்னும் ஒரு மாதத்துக்குள், திருத்தம் செய்யாவிட்டால், இந்த வெப்சைட்களை தடை செய்ய, சீன அரசு திட்டமிட்டுள்ளது.

சீனாவில், ஏற்கனவே, பல வெப்சைட்களை பார்க்க முடியாமல் செய்துள்ளது இந்த கண்காணிப்பு குழு. அதிலும், கிளுகிளு வெப்சைட்கள் பலவற்றுக்கு தடை விதித்துள்ளது. – செய்தி.

“கிளுகிளு வெப்சைட்கள்” என்பதற்கு என்ன இலக்கணம்?

அரைகுறை ஆடையில் அங்கங்களை வெளிக்காட்டி கொண்டிருக்கும் பெண்களின் புகைப்படங்களை வெளியிடும் வெப்சைட்டுகளும் இந்த “கிளுகிளு வெப்சைட்கள்” பட்டியலில் அடங்குமா? எனில்,

தமிழ் வலையுலகிலும், பத்திரிக்கையுலகிலும் எத்தனை வெப்சைட்கள் மற்றும் பத்திரிக்கைகள் தடைசெய்யப்பட வேண்டும்.

ஏன் அந்தவகையில் பார்த்தால் இந்த செய்தியை வெளியிட்டுள்ள தினமலரே ஒரு “கிளுகிளு வெப்சைட் கம் பத்திரிக்கை” தானே?

என்னமோப்பா ஒண்ணுமே புரியல!

உலகம், சிந்தனைகள், செய்திகள் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »