பகுத்தறிவு கிலோ என்ன விலை?

அண்ணாவின் பாடசாலையில் பகுத்தறிவு பயின்று வந்த இருபெரும் திராவிட கழகங்களான தி.மு.க மற்றும் அ.தி.மு.க கழக பகுத்தறிவு சிங்கங்கள், தங்கள் பகுத்தறிவை காயிதேமில்லத்தின் கல்லறையில் புதைப்பதை பாருங்கள்.

kayide dmk

kayide21.jpg

இதில் எடுத்துக் கூற வேண்டிய மிகப்பெரிய காமடி என்னவெனில், கடவுளுக்கு உருவமே இல்லை எனக் கூறி தங்களை பகுத்தறிவுவாதிகளாக காட்டிக்கொள்ளும் இசுலாமியர்களே இங்கே குழுமி நின்று சமாதியை கும்பிடுவதும், வணங்குவதும் தான்.

எல்லாமே அரசியல் படுத்தும் பாடு; இதில் பகுத்தறிவுக்கு எங்கே வேலை?

சிந்தனைகள் இல் பதிவிடப்பட்டது . 10 Comments »

10 பதில்கள் to “பகுத்தறிவு கிலோ என்ன விலை?”

 1. ஜீ Says:

  பதிவில்அறியாமைகள்:
  1.கடவுள் உருவத்தை கண்டவரில்லை என்று தான் இஸ்லாமிய கருத்து.
  2.சமாதியை, படைப்புகளை முஸ்லிம்கள் வணங்குவதில்லை.

  3. பெரியார் சிலைக்கு திராவிடர்கள் மாலைப்போடுவதை கூட வைத்து ‘பகுத்தறிவு என்ன விலை?’ என்று கேட்கலாம், அதாகப்பட்டது, அப்படி கேட்டுவிடவேண்டும் என்பது தான் நோக்கம் என்றால்!

 2. அழகேசன் Says:

  //1.கடவுள் உருவத்தை கண்டவரில்லை என்று தான் இஸ்லாமிய கருத்து.//

  ஆகா, இது நாம் இதுவரை அறியாத ஒன்றாயிற்றே. கடவுளுக்கு உருவமில்லை என்பது தான் இசுலாமிய கருத்து என்றல்லவோ நினைத்துக் கொண்டிருந்தேன்.

  அப்படியெனில் இசுலாமும் கடவுளுக்கு உருவம் உண்டு என்று தான் கூறுகிறதா?

  “எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்” என்று ஏதோ ஒரு இசுலாமிய பெரியவர் கூறிய வார்த்தை தான் நினைவுக்கு வருகிறது. 🙂

  //2.சமாதியை, படைப்புகளை முஸ்லிம்கள் வணங்குவதில்லை.//

  அப்போ மேலே படத்தில் தெரிவது என்ன?

  //3. பெரியார் சிலைக்கு திராவிடர்கள் மாலைப்போடுவதை கூட வைத்து ‘பகுத்தறிவு என்ன விலை?’ என்று கேட்கலாம், அதாகப்பட்டது, அப்படி கேட்டுவிடவேண்டும் என்பது தான் நோக்கம் என்றால்!//

  ஓ! அதற்கென்ன? தாராளமாக கேட்கலாம். அப்படி கேட்டுவிட வேண்டும் என்பது தான் நமது நோக்கம்.

  பகுத்தறிவின் தந்தை அய்யா பெரியாருக்கு ஆரத்தி, மாலை போட்டு வணங்கினால், அது எவராக இருந்தாலும் அவர்களையும் நோக்கி என் கேள்வி இப்படித்தான் இருக்கும்.

  “பகுத்தறிவு கிலோ என்ன விலை?”

 3. சுல்தான் Says:

  சரியான கேள்வி. குறைந்த பட்சம் முஸ்லீம்கள் என்று சொல்லிக் கொள்பவர்களாவது இது போன்ற சமாதி வழிபாடுகளிலிருந்து தங்களைத் தற்காத்து திருத்திக் கொள்ள வேண்டும்.

 4. ஜீ Says:

  //கடவுளுக்கு உருவமில்லை என்பது தான் இசுலாமிய கருத்து என்றல்லவோ நினைத்துக் கொண்டிருந்தேன்.

  அப்படியெனில் இசுலாமும் கடவுளுக்கு உருவம் உண்டு என்று தான் கூறுகிறதா?//
  கடவுள் உருவம்
  அது இன்னதென்று அறிந்தவரில்லை.

  2.சமாதியை, படைப்புகளை முஸ்லிம்கள் வணங்குவதில்லை.//

  அப்போ மேலே படத்தில் தெரிவது என்ன? ///

  இதை வணக்கம் என்ற அடிப்படையில் ஆகாது, அரசியல் என்ற அடிப்படையில்,கலாச்சார சீர்கேடு என்ற அடிப்படையில், எனினும் தூய்மை விரும்பும் முஸ்லிம்கள் இத்தகைய செயல்களை நிச்சயம் தவிர்ப்பார்கள்.

  பெரியாருக்கு சிலை ஏன்?

 5. கஜினி Says:

  //2.சமாதியை, படைப்புகளை முஸ்லிம்கள் வணங்குவதில்லை.//

  அப்போ மேலே படத்தில் தெரிவது என்ன?//

  முஸ்லிம்கல் யாரும் சமாதியை வணங்குவதில்லை,மேலே புகைபடத்தில் கண்பது இறந்தவர்கள் சாமாதியில் இறந்த அந்த மனிதருக்காக கடவுளிடம் பிராத்தனை செய்வது. ஆனால் இதையும் இஸ்லாம் வரம்புமீராமல் இருக்கும் படி எச்சரிக்கிரது.

  ஒரு விசயத்தை பற்றி முழுமையாக தெரியாவிட்டால், அதை தெரிந்தபின் விமர்சனம் செய்வது அறிவுள்ளவர்க்கு அடையாளம்.

  இஸ்லாமியன் எந்த சூல்நிலையிளும் இறைவனை அன்றி வேரு யாரையும் வணங்க மாட்டான்.

 6. அழகேசன் Says:

  //முஸ்லிம்கல் யாரும் சமாதியை வணங்குவதில்லை,மேலே புகைபடத்தில் கண்பது இறந்தவர்கள் சாமாதியில் இறந்த அந்த மனிதருக்காக கடவுளிடம் பிராத்தனை செய்வது. ஆனால் இதையும் இஸ்லாம் வரம்புமீராமல் இருக்கும் படி எச்சரிக்கிரது.//

  அப்படியா சங்கதி. நானும் கல்வெட்டெல்லாம் எழுப்பி கூடி நின்று பூமாலை, துணியெல்லாம் சாத்தி கைகளை கோர்த்து நின்றவுடன் வணங்குகிறார்களோ என்று நினைத்து விட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள்.

  ஆமாம் நினைவுச் சின்னங்கள் எழுப்புவது அவர்களுக்காக பிரார்த்தனை புரிவதற்காகவா? அப்படியெனில் பிரார்த்தனை புரிவதற்காக அவர்களுக்கு சிலைகளை வைப்பதிலும் என்ன தவறு இருக்கிறது?

  மேலே நண்பர் ஜீ கேட்ட //பெரியாருக்கு சிலை ஏன்?// என்ற கேள்விக்கு அவருக்காக பிரார்த்தனை புரிவதற்காக என்று கூறினால் ஏற்றுக் கொள்வீர்களா?

  தனக்கு ஒரு நியாயம். மற்றவர்களுக்கு ஒரு நியாயமா? என்னமோய்யா.

 7. அழகேசன் Says:

  //தூய்மை விரும்பும் முஸ்லிம்கள் இத்தகைய செயல்களை நிச்சயம் தவிர்ப்பார்கள்.//

  ம். தூய்மையான முஸ்லிம்கள், தூய்மையில்லாத முஸ்லிம்கள். கேட்க நன்றாகத் தான் உள்ளது.

  எனில் படத்தில் இருப்பவர்கள் தூய்மையில்லாத முஸ்லிம்கள்!

  //பெரியாருக்கு சிலை ஏன்?//

  நண்பர் கஜினிக்கு கூறிய கருத்தை ஒருமுறை கவனிக்கவும்.

  எனினும் நான் அவ்வாறு கூறவரவில்லை.

  நினைவுச்சின்னம் வைப்பது சம்பந்தப்பட்ட நல்ல தலைவர்களை நினைவுகூர்ந்தாலும், அது காலப்போக்கில் கடவுள் நிலைக்கு மாற்றப்படுவது கண்கூடு. இதற்கு புத்தர் நல்ல ஒரு உதாரணம். எனவே பெரியாருக்கு சிலை வைப்பதை தவிர்க்க வேண்டும்.

  நன்றி.

 8. அழகேசன் Says:

  //முஸ்லிம்கல் யாரும் சமாதியை வணங்குவதில்லை,மேலே புகைபடத்தில் கண்பது இறந்தவர்கள் சாமாதியில் இறந்த அந்த மனிதருக்காக கடவுளிடம் பிராத்தனை செய்வது.// – கஜினி.

  //சரியான கேள்வி. குறைந்த பட்சம் முஸ்லீம்கள் என்று சொல்லிக் கொள்பவர்களாவது இது போன்ற சமாதி வழிபாடுகளிலிருந்து தங்களைத் தற்காத்து திருத்திக் கொள்ள வேண்டும்.// -சுல்தான்.

  யார் சொல்வது சரி?

  ஒருவேளை சுல்தான் தூய்மையில்லாத இஸ்லாமியனோ? 🙂

 9. Mishal Says:

  “//குறைந்த பட்சம் முஸ்லீம்கள் என்று சொல்லிக் கொள்பவர்களாவது இது போன்ற சமாதி வழிபாடுகளிலிருந்து தங்களைத் தற்காத்து திருத்திக் கொள்ள வேண்டும்.”//

  Salman rushdie also claims he is muslim. Name does not make one muslim….

 10. அழகேசன் Says:

  மிஷல் எனில் இந்த படத்தில் காணப்படுவது போன்ற கல்லறையில் சுற்றி நின்று பிரார்த்தனை புரியும் முஸ்லிம்கள் எவரும் முஸ்லிமே இல்லையா?


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: