வெட்கம் இல்லாதது எது?

என்னய்யா இது? யாராவது தெரிஞ்சவய்ங்க கொஞ்சம் வெலக்கி தாங்கய்யா. சின்னப்புள்ள நானும் தெரிஞ்சி வச்சிக்கிடறேன்!

ஆன்மீகம், கழிவுகள், சிந்தனைகள் இல் பதிவிடப்பட்டது . 1 Comment »

“மே”யின் சிறப்புக்கள்!

மே 17 1981இல் தமிழகமெங்கும் மனுதர்ம நகல் எரிப்புக் கிளர்ச்சியை தி.க. நடத்தியது.

மே 18 1872இல் பெட்ரண்ட் ரஸ்ஸல் பிறந்தார்.

மே 19 2001இல் எஸ்.தவமணிராசன் மறைந்தார்.

மே 20 1845இல் அயோத்திதாசப் பண்டிதர் பிறந்தார்.

மே 21 1959இல் டாக்டர் தருமாம்பாள் மறைந்தார்

மே 22 1939இல் இந்தி எதிர்ப்புப் போரில் சிறை சென்ற பெரியார் விடுதலையானார்

1772இல் ராஜாராம் மோகன்ராய் பிறந்தார்

மே 23 1957இல் உயர்நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பெரியார் அறிக்கை அளித்தார்.

மே 24 1967இல் திருவாரூர், விடயபுரத்தில் கடவுள் மறுப்பு வாசகத்தை பெரியார் உருவாக்கினார்.

மே 27 1953இல் தமிழகமெங்கும் விநாயகன் உருவபொம்மை உடைப்புக் கிளர்ச்சியை பெரியார் நடத்தினார்.

மே 30 1778இல் வால்டேர் மறைந்தார்.

மே 31 1981இல் சிங்கள வெறியர்களால் யாழ் நூலகம் எரிக்கப்பட்டது.

படித்தது

தகவல் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

பகுத்தறிவு கிலோ என்ன விலை?

அண்ணாவின் பாடசாலையில் பகுத்தறிவு பயின்று வந்த இருபெரும் திராவிட கழகங்களான தி.மு.க மற்றும் அ.தி.மு.க கழக பகுத்தறிவு சிங்கங்கள், தங்கள் பகுத்தறிவை காயிதேமில்லத்தின் கல்லறையில் புதைப்பதை பாருங்கள்.

kayide dmk

kayide21.jpg

இதில் எடுத்துக் கூற வேண்டிய மிகப்பெரிய காமடி என்னவெனில், கடவுளுக்கு உருவமே இல்லை எனக் கூறி தங்களை பகுத்தறிவுவாதிகளாக காட்டிக்கொள்ளும் இசுலாமியர்களே இங்கே குழுமி நின்று சமாதியை கும்பிடுவதும், வணங்குவதும் தான்.

எல்லாமே அரசியல் படுத்தும் பாடு; இதில் பகுத்தறிவுக்கு எங்கே வேலை?

சிந்தனைகள் இல் பதிவிடப்பட்டது . 10 Comments »

புலிகள் தாக்குதலில் 156 இராணுவத்தினர் பலி!

கடந்த சில நாட்களாக வவுனியா பகுதிகளில் நடைபெற்ற சண்டையில் 156 இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக இலங்கை ஐக்கிய தேசியக் கட்சியின் செய்தித்துறை தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

“விடுதலைப் புலிகள் வசம் 95 சடலங்கள் இருக்கின்றன. அவை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிக்கப்பட உள்ளன. இந்த மோதல்களில் விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்தின் இரு டாங்கிகளை எடுத்துச் சென்றுள்ளதுடன் 10 கொள்கலன்களில் உள்ள வெடிபொருட்கள் மற்றும் கனரக ஆயுதங்களையும் அழித்துள்ளனர்.

இலங்கை இராணுவத்திற்கு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்திய இவ்வளவு உக்கிரமான மோதல் நடைபெற்ற சமயம் இல்லங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அமெரிக்காவிற்கு பறந்து விட்டார். மோசமான நிலைமையில் அவர் தனது கடமையை மறந்து எவ்வாறு அமெரிக்கா செல்லலாம்?

ராஜபக்ச குடும்பத்தினர் அதிகாரத்தில் உள்ள போது தங்களால் முடிந்த அளவிற்கு தமது பைகளை நிரப்பி வருகின்றனர். பின்னர் அவர்கள் அவரவர் இடத்திற்கு சென்று விடுவார்கள்” என்று பேசினார்.

லக்ஸ்மன் கிரியெல்லாவின் இப்பேச்சைக் குறித்து இராணுவ பேச்சாளர்ர் பிரசாத் சமரசிங்க கருத்து கூறுகையில், “விடுதலைப் புலிகள் 13 இராணுவத்தினரின் சடலங்களை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளித்துள்ளனர், எனினும் நான் இராணுவப் பேச்சாளராக இருப்பதால் அரசியல்வாதிகளின் அறிக்கைகளுக்கு என்னால் பதிலளிக்க முடியாது” என்று கூறினார்.

 
 
இலங்கை, செய்திகள் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

பிரபஞ்சம் தோன்றியது எப்படி?

நம்முடைய பிறந்த நாளை நம்முடைய பெற்றோர்கள் கூறித்தான் நமக்குத் தெரியும். இது போலவே, அவர்களின் பிறந்தநாளை அவர்களது பெற்றோர் கூறி அவர்களுக்குத் தெரியும்.
இப்படியே கூறிக்கொண்டே போகலாம். என்றாலும், நமது மூதாதையர்களைப் பற்றிய வரலாற்றை இரண்டு அல்லது மூன்று தலைமுறைக்கு மேல் நாம் அறிந்திருக்க முடியாது!
நமது மூதாதையர்களுக்கும் முன்னோடியாக குரங்கு இனம் இருந்து வந்ததாக அறிவியல் கூறுகிறது. (சார்லஸ் டார்வின் தமது ஆய்வில் குறிப்பிடுகிறார்) இதையே நாம் ஒப்புக்கொண்டு மேலும் விவரங்கள் அறிய முற்படுவோமேயானால்:
இவர்கள் காலத்திற்கும் முன்னால் நமது உயிர்த்தோற்றம் அமீபாக்கள் என்று கூறப்படும் சின்னஞ்சிறு உயிர்களில் தோன்றி, காலப்போக்கில் இரு கால்களும், அவற்றில் பத்து விரல்களும், இவைகளை இயக்கும் நரம்புத் தொடர்களும், இவைகளின் மூலம் இயக்கப்படும் ஒரே ஒரு மூளையும், இந்த மூளையில் அடங்கப்பெற்ற செல்களைத் துளைத்தெடுக்கும் பல்வேறு கேள்விகளும், அதற்குப் பதில்களும் கூறக்கூடிய மனித இயந்திரமாக இன்று மனிதன் உருவகப்பட்டிருக்கிறான்.
பிரபஞ்சத்தில் நிகழப்பெற்ற எந்த ஒரு கேள்விகளுக்கும் – பிரச்சினைகளுக்கும் பதில் கூறும் ஒரே ஒரு உயிர் “மனிதன்” மட்டும்தான் என்பதை பெருமையோடு ஒப்புக்கொள்வோம்.
இன்று நம் முன்னே தோன்றப்படும் எந்த ஒரு பொருளை எடுத்துக்கொண்டாலும் அது எப்படித் தோன்றியது என்ற வினா எழுப்பி, அதற்குப் பதில் கூறும் நிலையில் இன்று அறிவியலில் வளர்ந்திருக்கிறான் மனிதன்.
அந்த அடிப்படையில் இப்பிரபஞ்சப் பொருட்களின் தோற்றம் எப்படித் தோன்றியது? என்று பல்வேறு அறிஞர் பெருமக்கள் தமது ஆராய்ச்சி மூலம் கருத்துகளை வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
அந்தக் கருத்துகளை இங்கே பகிர்ந்து கொள்வதுடன், நமது கருத்துகளையும் முன்வைக்க கடமைப்பட்டுள்ளோம்.
பிரபஞ்சம் உருவான கட்டத்தில் மிகப் பெரிய வெடிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்; அப்படி ஏற்பட்ட வெடிப்பின் மூலம் சிதறி ஓடப்பெற்ற பொருட்கள் இந்த நிமிடம் வரை விண்வெளியில் தொடர் ஓட்டமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று கூறுகிறார் பெல்ஜிய வான ஆராய்ச்சியாளர் ஷேர்த் லேமாத்ரே (Georges Lemaitre) என்ற அறிஞர்.

நினைத்துப் பார்க்க முடியாத அமுக்கத்தில்; அதாவது, ஒரு தேக்கரண்டி அளவுள்ள பொருள் கிட்டத்தட்ட 10 கோடி டன் எடையுள்ளதாக இருந்தால் எந்த அளவுக்கு அமுக்கம் நிறைந்திருக்குமோ அந்த அளவு திணிவு கொண்ட பொருளாக இருந்து, “பெரும் டமார்” என்ற சத்தத்துடன் வெடித்துச் சிதறியிருக்க வேண்டும்; என்று கூறும் அவர்,
இந்நிகழ்வு ஏற்பட்டு கிட்டத்தட்ட எழுநூறு கோடி ஆண்டுகள் கடந்திருக்கும் என்கிறார்.

பிரபஞ்சம் மேலும் மேலும் பெரிதாகி வரும் நிகழ்வினை கவனிக்கிற போது, அது புறப்பட்ட ஆரம்பம் என்று ஒன்று இருந்து அதிலிருந்து தொடர் ஓட்டமாக விரிந்துகொண்டே செல்கிறது என்று கூறுகிறார்.
பிரபஞ்சம் உருவாகி எழுநூறு கோடி ஆண்டுகள் இருக்கலாம், என்ற இக்கருத்தில் சில தவறுகள் தொக்கிக் கொண்டிருக்கின்றன.
ஒரு ஆண்டு என்பதே பூமியின் 365 சுற்றுக்களுக்குள் நிறைவடையும் ஒரு அலகு. பொருள் வெடித்து, அது சிதறி ஓடி, ஓடிய பாதையில் ஆங்காங்கே நட்சத்திரங்களாகவும், கிரகங்களாகவும் இடம் பெற்று அது தன்னைத் தானே சுற்றிக்கொண்டதில் கணிக்கப்பட்டது தான் நமது பூமியின் தோற்றம். ஒரு ஆண்டு கணக்கு.
பூமியின் 365 சுழற்சி கொண்டதுதான் ஒரு வருடம் என கணக்கிட்டு, அதை நமது நடைமுறைக்கு வழமையாக்கி வருகிறோம்.
எனவே இந்தச் சுழற்சி கணக்கீட்டின் மூலம் பிரபஞ்சத் தோற்றம் ஏற்பட்ட காலக்கணக்கை வகைப்படுத்துவது என்பது எப்படிப் பொருந்தும்? எனவே,
இக்கருத்து சரியானது இல்லை.
திணிவு மிக்க மொத்தை உருவம் ஒன்று வெடித்துச் சிதறி, ஓடியதின் தொடரில் தான் பிரபஞ்சப் பொருள் அனைத்தும் உருவாகியிருக்க வேண்டும் என்ற இக்கருத்து அமெரிக்கப் பவுதீக விஞ்ஞானி ஜார்ஜ் காமோவ் (George Gamow) என்பவரும் ஒப்புக்கொள்கிறார்.
* இன்று காணப்படும் பிரபஞ்சப் பொருள் அனைத்தும் அடர்த்திக்கொண்ட மொத்தையாக ஒரு கட்டத்தில் இருந்திருக்கிறது.
* இந்த மொத்தை 2500 கோடி டிகிரி பாரன்ஹைட் வெப்பத்தில் வெடித்துச் சிதறியிருக்கிறது.
*வெப்ப நிலை 50 லட்சம் டிகிரி பாரன்ஹைட்டாகக் குறைந்து மூலகங்கள் உருவாகி இருக்கிறது.
* வாயு நிலையில் இந்த பொருட்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து, ஈர்த்து, முகில்களாகப் பிரியச் செய்து நட்சத்திரங்களாகவும், கிரகங்களாகவும் உருப்பெற்றிருக்கின்றன என்ற இக்கருத்தை ஜார்ஜ் காமோவும் ஒப்புக்கொள்கிறார்.
மேற்கண்ட இக்கருத்தின் மூலம், பரிணாம வளர்ச்சியின் பல படிக்கட்டுகளை கடந்து இன்று, ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளுக்குப் பதில் கண்டுபிடிப்பவர்களாக இருக்கிறோம்.
பெரும் பிண்டம் வெடித்துச் சிதறியதன் மூலம் அண்டங்கள் விரிவடைகின்றன என்ற கருத்தை ஒப்புக் கொள்வதாக இருந்தால், வெடித்துச் சிதறியதற்கு முந்தைய கட்டம் மற்றும் ஆரம்ப இடம் எங்கிருக்கிறது என்ற வினா எழுகிறது.
தவிர, வெடிப்புக்கு முந்தைய கட்டத்தில் விண்வெளி முழுமையும் வெறும் வெற்றிடமாக இருந்ததா? அவை வெடித்துச் சிதறி ஓடும் பாதைகளில் தடுப்பலைகள் இருந்து அதையும் கடந்து சென்றனவா என்பன போன்ற நியாயமான கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்கின்ற இடத்திலே இருக்கிறோம். வேறு சில விஞ்ஞானிகள் தூசுப் படலம் தோன்றி, காலப் போக்கில் அவைகள் ஒன்றோடொன்று திரண்டு, திரட்சிகளாகி அதுவே, நட்சத்திரங்களாகவும், கிரகங்களாகவும் உருப்பெற்றிருக்கலாம் என்ற கருத்தை முன் வைக்கின்றனர்.
அறிவியல் வளர்ச்சியின் வேகம் புதிர்களுக்கு விடை காண்பதுதான் என்பதிலே பெருமை கொள்வோம்.

படித்தது…

தகவல் இல் பதிவிடப்பட்டது . 6 Comments »

பத்திரிக்கைகள் பாராட்டும் முன்மாதிரி இந்திய பெண்??!!??

sunitha.jpg

அமெரிக்கா ரஷ்யா உள்பட பல்வேறு நாடுகள் விண்வெளியில் உருவாக்கி வரும் சர்வதேச மிதக்கும் ஆய்வுக்கூடத்தில் இந்திய வீராங்கனை(அன்னிய நாட்டுக்காக – அதுவும் அமெரிக்காவுக்காக உழைப்பதில் தான் நாட்டுக்கு பெருமையே உள்ளது?!!) சுனிதா வில்லியம் கடந்த 6 மாதங்களுக்கு மேல் தங்கி இருந்து ஆய்வு நடத்தி வருகிறார்.

 

அவரை பூமிக்கு அழைத்து வரவும் புதிய தளவாடங்களை ஆய்வுக்கூடத்துக்கு கொண்டு செல்லவும் அட்லாண்டிஸ் என்ற ராக்கெட்டை நாசா நிறுவனம் 8-ந்தேதி (இந்திய நேரப்படி 9-ந்தேதி காலை 5மணி) அனுப்புகிறது.

 

7 விண்வெளி நிபுணர்கள் இதில் செல்கிறார்கள். 11 நாட்கள் விண்வெளி பயணத்துக்கு பிறகு சுனிதாவுடன் இந்த அட்லாண்டிஸ் ராக்கெட் பூமிக்கு திரும்பும்.

 

அட்லாண்டிஸ் ராக்கெட்டை செலுத்துவதற்கான கவுண்ட்டவுன் இன்று மாலை தொடங்குகிறது. ராக்கெட் அதன் ஏவுதளத்தில் தயாராக நிறுத்தப்பட்டுள்ளது. அதில் செல்லும் 7 வீரர்கள் ஏவுதளத்துக்கு வந்து விட்டனர்.

 

பூமிக்கு திரும்பும் சுனிதா, விண்வெளியில் தங்கி இருந்த போது தனது ரத்தம் சிறுநீர்(!!!?????!!!?!?!?!?) ஆகியவற்றை சோதனைக்காக எடுத்துள்ளார். 80 டிகிரியில் பாதுகாப்பாக அது வைக்கப்பட்டுள்ளது.

 

புளோரிடாவில் உள்ள கென்னடி ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் ஏவப்படும். இதுவரை வானிலை சாதகமாகவே உள்ளது. ஆனால் வெள்ளிக்கிழமை இடியுடன் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று நாசா நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிந்தனைகள் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »